தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 oktober 2016

புலிகளுடன் தொடர்புடைய அகதிகளை பாதுகாக்க முடியாது – சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு…


சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் குடிவரவுக்கான பணியகத்தை மேற்கோள்காட்டி, சுவிஸ்இன்போ இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.
குறிப்பாக, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் உரிமைகள் தொடர்பான விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, இப்போது தஞ்சம் கோரும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும்.
அத்துடன் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளது” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten