தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 oktober 2016

மேல் மாகாணத்தில் பொலிஸார் உசார்படுத்தலின் விளைவு - விபரம் உள்ளே..!

மேல் மாகாணத்தில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பின் போது சுமார் 1200க்கும் மேறபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1 மணி முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் 46 பேர் உள்ளடங்குவதாகவும் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க கூறியுள்ளார்.
மேலும், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர்கள் 540 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 177 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 17 பேர் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 23 பேர் இந்த சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய சந்தேக நபர்கள் மூன்று பேரும், முப்படையிலிருந்து தப்பியோடிய இருவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிபொலிஸ் அதிபரின் தலைமையில் மூன்றாயிரத்து 72 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten