அண்மையில் 6வது ஆண்டு சிறப்பிதழாக வெளிவந்த டிராவலர் என்ற இதழின் அட்டைப்படத்தில் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் இடம் பெற்று பெரும் சர்ச்சையை கிளப்பியது.
காரணம் என்னவென்றால் அந்த இதழின் அட்டைப்படத்தில் பிரியங்காவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதில் பிரியங்கா அணிந்திருந்த மேல் சட்டையில் அகதிகளின் மனதை புண்படுத்தும் வகையில் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்ததாக கூறி நடிகை பிரியங்கா சோப்ரா மீதும் டிராவலர் என்னும் பத்திரிக்கை மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் பிரபல தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த பிரியங்கா சோப்ராவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் அகதிகள் மனதை புண்படுத்தியதற்கு தான் மிகவும் வருத்தமடைவதாகவும், அவர்களிடம் தான் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த அட்டைப் படம் சொல்ல வந்த கருத்து, தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது எனவும் கூறியுள்ளார்.
Bold and fearless, @priyankachopra makes a statement on our 6th anniversary issue cover. #PCinCNT #WhyWeTravel
இவர் விஜய் நடிப்பில் உருவான தமிழன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten