தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 oktober 2016

புகலிடம் மறுத்த அதிகாரிகள்: தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்த அகதி!

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதி ஒருவர் பேருந்து நிலையத்தில் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் Glarus மாகாணத்தில் உள்ள Nestal என்ற நகரில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துனிசியா நாட்டை சேர்ந்த 45 வயதான அகதி ஒருவருக்கு சுவிஸில் புகலிடம் மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோதமாக சுவிஸில் தங்கியிருப்பதால் அவரை நாடுகடத்துவோம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அவர் சென்றுள்ளார்.
பாட்டிலில் பெட்ரோலை நிரப்பிய அவர் அங்கிருந்து வெளியேறி எதிரே உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர், கண் இமைக்கும் நேரத்திற்குள் பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றிய அவர் திடீரென தீவைத்துக்கொண்டு அலறியுள்ளார்.
நபர் தீக்குளித்து துடிப்பதை கண்டு சிலர் கடும் போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்துள்ளனர்.
எனினும், உடலில் மோசமாக தீக்காயங்கள் ஏற்பட்டதால் ஹெலிகொப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் நேற்று பிற்பகல் வேளையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புகலிடம் மறுக்கப்பட்ட அகதி ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten