அத்துடன் ஹெலிகப்டர்களும் தாக்குதலில் ஈடுபட்டன. யாழ் நகரமே போர்க் கோலம்பூண்டிருந்தது.
இந்தியப் படைகளின் எறிகணைகள் யாழ்ப்பாண வைத்தியசாலை வெளிநோயாளர்பிரிவில் வந்து வீழ்ந்து வெடித்தது.
அத்துடன் ஏழாவது கூடத்தில் விழுந்தஎறிகணையினால் ஏழுபேர் கொல்லப்பட்டார்கள்.
அத்துடன் மருத்துவமனை மீதுதுப்பாக்கிச் சூடுகளும் நடாத்தப்பட்டன.
மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47நோயாளர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டனர்.
இது நடைபெற்று 29 வருடங்கள்முடிந்ந்துவிட்டது. குறித்த வைத்தியசாலையில் நேற்று அஞ்சலி நிகழ்வும்நடைபெற்றுள்ளது.
இதேவேளை யாழ் - கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இரு மாணவர்கள் உயிரிழந்தசம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு சர்ச்சைகளுடன் யாழ். போதனாவைத்தியசாலையில். இளைஞர் யுவதிகளும் பொதுமக்களும் என பலர் பெரும் பரபரப்புடன்நேற்று அங்கே காணப்பட்டார்கள்.
ஆனால் தமிழர் மீது தொடுக்கப்படும் படுகொலைகள் விடியாத மண்ணில் முடியாத கதையாகதொடர்வதை நிரூபித்துக் காட்டினார்கள் குறித்த வைத்தியசாலைக்கு நேற்று சென்றயாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் மீது துப்பாக்கிச் சூடுமேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்றைய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளார் எனதெரிவித்துள்ளனர்.
உண்மையில் யாழ். போதனா வைத்தியசாலையில் 29 வருடங்களுக்கு முன் ஏற்பட்டபரபரப்பிற்கும் நேற்று ஏற்பட்ட பரபரப்பிற்கும் தலைமுறையினரில் மாற்றம்இருந்ததே தவிர சம்பவங்களில் மாற்றம் இருக்கவில்லை.
அன்றும் கொலைசெய்யப்பட்டார்கள், இன்றும் கொலை செய்யப்படுகின்றார்கள் என்பது இங்கேகுறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/politics/01/121854
Geen opmerkingen:
Een reactie posten