தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 oktober 2016

யாழ். மாணவர்கள் சுட்டுக்கொலை! பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு கோரிக்கை

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பொலிஸ்மா அதிபர் பொறுப்பேற்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றம் வடக்கு மற்றும் தென் மாகாணங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் அரசாங்கத்தால் மாத்திரமே நடவடிக்கைகள் முன்னெடுக்க முடியும்
என அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் இளைஞர் ஒருவர், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் போது அந்த நேரத்தில் கடமையில் இருந்த மஹிந்த பலசூரிய தனது பதவியை
இராஜினாமா செய்தார் என அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பு தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/politics/01/121859

யாழ் மாணவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளியானது

யாழ் - கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த மாணவர்களின் மரணத்திற்கான பிரேத பரிசோதனை அறிக்கை யாழ்.நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிபதி மாணவர்களிடம் கலந்துரையாடி உள்ளார்.
இதன்படி, மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றைய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளார் என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் தெரிவித்துள்ளார்.
பிரேதப்பரிசோதனை இடம்பெறும் சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் பல அசம்பாவிதங்கள் நடைபெற்றதுடன், பல்கலைக்கழக மாணவர்கள், மக்கள் எனப் பலர் குழுமியிருந்தனர்.
இந்த நிலையில் மாலை 5 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரை அழைத்த யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என கூறியிருந்தார்.
இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்த நீதிபதி மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் உயிரிழந்த மாணவர்களின் உடலை பார்வையிட்டனர்.
தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது “வன்முறைகளில் ஈடுபட வேண்டாம், ஒரு மாணவனின் உடலில் துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளது, மற்றைய மாணவன் விபத்திலேயே உயிரிழந்துள்ளார், உடலை எரிக்க வேண்டாம், புதைக்கும் படியும் விசாரணைகள் விரைந்து எடுக்கப்படும்” எனவும் நீதிபதி கூறியதாக பல்கலைக்கழக மாணவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் இடம்பெற்றதிலிருந்து தற்போது வரை பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இருப்பினும் இந்த இளைஞர்களின் மரணத்திற்கு விபத்து காரணம் இல்லை என்றும், இவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.
மக்களின் கருத்துக்கமைவாக இது கொலையாக இருக்கலாம் என்பதை காலையில் பிரசுரமான செய்தியில் தமிழ்வின் சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும் தற்போது யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் இந்த சம்பவத்திற்கான காரணத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Geen opmerkingen:

Een reactie posten