இங்கிலாந்தில் பள்ளிச்சிறுமியை பொலிசார் ஒருவர் மிகமோசமாக அடித்து இழுத்துச்சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு இங்கிலாந்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியின் வெளிப்புறத்தில் நேற்று மாலை 4.15 மணியளவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, 13 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவியை பொலிசார் ஒருவர் அடித்து இழுத்துசெல்கிறார். ஆனால், அந்த மாணவி பொலிசிடம் இருந்து தப்பிப்பதற்காக போராடியும், அந்த பொலிஸ் அச்சிறுமியை விடவில்லை. மாறாக தரையில் விழுந்த அச்சிறுமியை தரதரவென இழுத்துசெல்கிறார். இதனை Katelynn மற்றும் Murphy King என்ற சிறுமிகள் தங்கள் கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளனர். இவர்கள் இருவரும், தங்கள் தோழியை பார்ப்பதற்காக அப்பள்ளிக்கு சென்றபோது தான், அப்பள்ளியில் வெளிப்புறத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை வீடியோ எடுத்த மாணவிகள், தங்கள் பாட்டியிடம் சென்று கொடுத்துள்ளனர், இந்த வீடியோவை பார்த்த பாட்டி Furious Joan Whittake (51) கூறியதாவது, ஒரு பொலிஸ் அதிகாரியாக இருந்து கொண்டு சிறுவயது மாணவியிடம் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டது நியாயமற்ற செயல். ஒரு இறைச்சி துண்டை இழுத்துச்செல்வது போன்று அச்சிறுமியை கையாண்டுள்ளார் என கூறிய இவர், இந்த வீடியோ காட்சியினை பொலிஸ் தலைமை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். இதனை அறிந்த அந்த பொலிஸ் அதிகாரி, சிறுமிகளிடம் சென்று தங்கள் கைப்பேசியில் இருக்கும் காட்சிளை நீக்கிவிடுமாறு மிரட்டியுள்ளார். தற்போது பொலிசார் என்ன காரணத்துக்காக இவ்வாறு நடந்துகொண்டார் என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். |
18 Oct 2016 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1476771799&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 18 oktober 2016
இங்கிலாந்தில் மாணவிகளை வீதியில் இழுத்துச்சென்ற பொலிஸ்! மனிதத்துக்கு நடந்தது என்ன?
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten