தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 oktober 2016

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இனவெறி தாக்குதல்? முகாம் அதிகாரி பணிநீக்கம்!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இனவெறி தாக்குதல் நடந்ததாக தவறான புகார் தெரிவித்த முகாம் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸில் உள்ள ஆர்கவ் நகரில் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமின் மேற்பார்வையாளர்களாக இரண்டு அதிகாரிகள் பணியில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இருவரும் இரவுப்பணியில் இருந்தபோது முகாமில் உள்ள அகதிகள் மீது இனவெறி தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை இரண்டு மேற்பார்வையாளர்களும் நேரடியாக பார்த்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மேற்பார்வையாளர் ஒருவர் தனது உயர் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
மேலும், இனவெறி தாக்குதலுக்கு காரணமானவர்களின் பெயர்களையும் அவர் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால், விசாரணையின்போது முகாமில் இன்வெறி தாக்குதல் நடந்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.
மேலும், இனவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட நபர்கள் மீது விசாரணையும் நடத்தப்படவில்லை.
எனவே, உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல் அளித்த குற்றத்திற்காக மேற்பார்வையாளர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten