அத்துடன் குறித்த விமானதளம் உள்ள காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்குச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த வயதான சிலர் அங்கு விடுதலைப்புலி உறுப்பினர்கள் நிர்வாண நிலையில் சங்கிலிகளில் கட்டி வேலை வாங்கப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரையும் யோகி மற்றும் பாலகுமாரன் ஆகியோரையும் தாம் மிகக் கேவலமான நிலையில் கண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அப்பகுதிக்கு தேன் எடுப்பதற்குச் சென்ற சில தனி நபர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வயல் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் பாதை மாறி குறித்த இராணுவ மர்மப் பிரதேசத்திற்குள் சென்ற போது அவற்றை இராணுவம் சுட்டுக் கொன்றதுடன் மாட்டு உரிமையாளர் இராணுவத்தால் முகாமுக்கு அழைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவமும் இடம் பெற்றுள்ளது.
இது குறித்த யாருக்காவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக குறித்த உரிமையாளர் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த மாட்டு உரிமையாளர் தனது அடி காயங்களுக்கு நாட்டு மருத்துவரை அணுகிய பின்னரே அவரது மாடுகள் பல இராணுவத்தால் சுடப்பட்டு இறந்த விடயம் வெளியாகியுள்ளது.
இராணுவத்தின் 59வது கட்டளைப் பீடம் அமைந்துள்ள குறித்த பகுதி சுமார் 25 சதுர கிலோ மீற்றர்கள் உள்ளடக்கியதாகவும் அடர்ந்த காட்டுப்பகுதியுடன் கூடியதாகவும் காணப்படுகின்றது.
இக் காட்டுப் பகுதிக்குள் ஊடுருவி தேன் எடுப்பதற்குச் செல்லும் சிலர் இராணுவத்தால் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரணைமடுக் குளத்திறு அருகில் 1.3 கி.லோ மீற்றர் நீளமான விமானதளம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதை விட அந்தத் தளத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் துாரத்தில் குறித்த நவீன விமான நிலையம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் மர்மமாகவே உள்ளது.
குறித்த விமான தளத்திற்கு நள்ளிரவு வேளைகளில் பல விமானங்கள் வந்து செல்வதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை குறித்த முகாம்களில்தான் பல முன்னாள் புலி உறுப்பினர் விச ஊசி போட்டு கொல்லப்படுவதாகவும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten