அகதிகள் தொடர்பான கடுமையான கொள்கைகளை கடைப்பிடிக்கும் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா அரசாங்கம், அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது இந்த கொள்கை தொடர்பான யோசனையை கொண்டு வரவுள்ளது.
மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வரும் அகதிகளை அவர்களின் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்ப போவதாக அவுஸ்திரேலியா கூறியுள்ளது.
அத்துடன் திருப்பி அனுப்பி வைக்கப்படும் இவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் சுற்றுலாப் பயணிகளாகவோ, வர்த்தக நடவடிக்கைகளுக்கோ அல்லது திருமணத்திற்கோ அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவது தடை செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten