இந்த வழக்குத் தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் நேற்று முன் தினம் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. சுரேஷ்குமார் துரைராஜா (44 வயது) என்ற மேற்படி
இலங்கைத் தமிழர் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி லிவர் லைம் வீதி புகையிரதநிலையத்திற்குள் பிரவேசித்த போது, புகையிரத நிலைய உத்தியோகத்தர் ஒருவர் அவரை வழிமறித்து பயணச்சீட்டைக் காண்பிக்குமாறு அவரைக் கோரியுள்ளார்.
இதன்போது பயணச்சீட்டு எதனையும் வைத்திராத சுரேஷ்குமார், தான் புகையிரதத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து அவர் பிரித்தானிய போக்குவரத்துப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். எனினும் அவரிடம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவரிடம் குண்டு எதுவும் இருக்கவில்லை.
அவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளவே அங்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதன்போது சுரேஷ் குமார் தற்கொலை செய்து கொள்ளுமாறு தனது தலையில் ஒரு குரல் கட்டளையிட்டதாக தெரிவித்திருந்தார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்காக உளவு பார்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது..
பிரித்தானிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட அவர் சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இலங்கையில் அவர் சந்தித்த .பயங்கரமான நிகழ்ச்சிகளால் அவர் மோசமான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
பிரித்தானியாவில் இதற்கு முன்னர் வேறு எந்தக் குற்றச்சாட்டுகள் நிமித்தமும் கைதுசெய்யப்படாத சுரேஷ்குமார் , தொண்டு பணிகளில் தானாக முன்வந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
அவர் பிரித்தானியாவிலான அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் மிகவும் மனம் உடைந்து போயிருந்ததாக அவரது சார்பில் வாதாடிய சட்டத்தரணி எறிக் லாம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்படி வழக்கை விசாரித்த லிவர்பூல் கிறவுண் நீதிமன்ற நீதிபதி அனில் முர்ரே, சுரேஷ்குமாரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதை விடவும் அந்த அச்சுறுத்தல் அங்கு பீதியும் பதற்றமும் ஏற்படக் காரணமாகவிருந்ததாக தெரிவித்து அவருக்கு 10 மாத சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten