தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 oktober 2016

சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்வோருக்கு எச்சரிக்கை!

சுற்றுலா வீசாவில் வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரும் சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடியாதென அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வெளிநாட்டிற்கு செல்பவர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டம் செயற்படுத்தப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலா வீசா மூலம் டுபாய் சென்று தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
திருகோணமலை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த கைது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten