தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 19 oktober 2016

கருணாவை அனுப்பிய கோத்தபாய?

கருணாவை அனுப்பிய கோத்தபாய?

இலங்கையில் ஒவ்வொரு நாளும் அடுத்தநாள் எப்படி அமையப்போகின்றது என்பது அறிய முடியாத பதற்றமான நிலைமைகள் அன்றாடம் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற கருத்துக்கணிப்பே அனைவரின் கூற்றாக அமைகின்றது இதில் எந்தளவிற்கு உண்மைத்தன்மை இருக்கின்றது என்பது மட்டும் புரியவில்லை.
இதன்படி தென்னிலங்கை, விடுதலைப்புலிகளின் தலைவர் மரணிக்கவில்லை என்பதை கூற முற்படுகின்றது என்பதும் விரைவில் அதனையும் எதிர்ப்பார்க்க முடியும் எனவும் தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து அரசியல் தலைமைகள் கூறிவரும் கருத்துகளே இதற்கு முக்கிய சான்றாக அமைகின்றது எனவும் கூறப்படுகின்றது.
அண்மைக்காலமாக அரசியல் பிரபலங்கள் கூறிய கருத்துகள்,
பிரபாகரனின் மரணத்தை ஆதாரத்துடன் செய்ய வேண்டியிருந்தது. இராணுவத்தில் இருந்த எவருமே பிரபாகரனை நேரில் கண்டதில்லை. அதனால்தான் பிரபாகரனின் உடலை அடையாளம் காண கருணாவை அனுப்பிவைத்தேன். பிரபாகரனின் உடல் மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது – பொன்சேகா
பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது நான் இருக்கவில்லை தாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை தீவிரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – மஹிந்த
இறுதி யுத்தம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் என்னுடன் எனது கல்லறைக்கே வர வேண்டும். போர் பற்றி எதனையும் வெளிப்படுத்த மாட்டேன் – கமால் குணரத்ன
மலேசியாவில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை செய்து கொண்டிருக்கின்றோம் – ரணில்
இவை அனைத்தும் யுத்த காலத்தில் முக்கிய தலைமைகளாக இருந்தவர்கள் கூறியுள்ள கருத்துகள். அத்தோடு இவை தவிர பல தென்னிலங்கை தரப்புகளும் கூறிவருவதும் விடுதலைப்புலிகள் முற்று முழுதாக மரணிக்க வில்லை என்பதே.
இதேவேளை மைத்திரி “இரகசியத்தை வெளியிடுவேன்” என்று பகிரங்கமாக கூறியதன் பின்னரே பல்வேறுபட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்க உண்மையே.
அத்தோடு விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலை அடையாளம் காட்டிய கருணா அரசியல் வாழ்வில் இருந்து ஒதுங்கியிருந்து தற்போது மீண்டும் அரசியலில் பிரவேசிக்கின்றார். இலங்கை யுத்தத்திற்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
ஏற்கனவே பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு வந்த வேளை புதிதாக கோத்தபாய அந்த சிக்கலில் பொன்சேகாவை இழுத்து விட்டுள்ளார். ஏன் இவர்கள் தற்போது இவ்வாறு முரண்பட்ட கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்? என்ற கேள்வி எழுகின்றது.
ஆட்சிமாற்றம் என்பது முக்கியமாகி உள்ள போது நல்லாட்சி தரப்பு வெளிப்படையாக மஹிந்த தரப்பை பலவீனப்படுத்திக் கொண்டு குற்றவாளிகளாக்கிக் கொண்டு வருகின்றது.
இருந்தபோது ம் தற்போது மஹிந்த தரப்பு நல்லாட்சியை வீழ்த்த திட்டமிடும் செயலாகவும் இது நோக்கப்படவேண்டும்.
யுத்த வெற்றி என் ஒன்று மட்டுமே தற்போது மஹிந்த தரப்பிற்கு உள்ள ஒரே ஆயுதம் அதனை மீண்டும் சரியான தருணத்தில் பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்கின்றதா?
யுத்த வெற்றியை ஒவ்வொருவரும் “தான் செய்தேன்” என மார்தட்டிக் கொண்ட முக்கிய தலைவர்கள் தற்போது பின்வாங்குகின்றன. பயத்தில் பின்வாங்குகின்றனவா?
மிக முக்கியமாக தற்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பிரபாகரனின் மரணம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
இங்கு அவர் பொன்சேகா மீது பலி சுமத்தும் செயற்பாடு என்பது அவரை காப்பாற்றி வரும் ரணிலை வீழ்த்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகவும் கருத முடியம்.
அதேவேளை மற்றொரு வகையில் தற்போது பிரபாகரன் மரணிக்கவில்லை என்பதை கூறிவிட்டால் ஆட்சியை கைப்பற்ற இலகுவாகிவிடும் பின்னர் ஏற்கனவே ஆடப்பட்ட நாடகங்கள் போல் மீண்டும் நாடகங்களை அரங்கேற்றி உண்மைகளை மறைத்து விட முடியும்.
எவ்வாறாயினும் விடுதலைப்புலிகளின் தலைவர் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட வில்லை ஆனால் எப்படி போர் வெற்றி கிடைத்தது? என்பதை கூடிய விரைவில் தென்னிலங்கை தெளிவு படுத்தும்.
இதற்கான ஆரம்பகட்ட கருத்துகளையே மஹிந்த, கோத்தபாய, பொன்சேகா மற்றும் கமால் குணரத்ண ஆகியோர் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் எனவும் தென்னிலங்கை புத்திஜீவிகள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten