யாழ்ப்பாணம் – ஆணைக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் நடாத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.தமிழர்கள் எல்லாரும் ஒன்டு சேரப்போறிங்களா? என கொச்சை தமிழில் கூறி ஆனைக்கோட்டை சாவற்கட்டு பகுதியில் இளைஞர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 8:30pm இடம்பெற்றுள்ளதுடன், இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதுடன், அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருன்தனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்னாள் இளைஞர்கள் சிலர் கூடி நின்றுள்ளனர். இதன் போது அங்கு பிக்கப் ரக வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த இளைஞர்கள் மீது சராமரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். வாள்களாலும் வெட்டியுள்ளனர்.
இதனால் இளைஞர்கள் அனைவரும் அங்கிருந்து சிதறி ஓடியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது இளைஞர்களை மடக்கிப் பிடித்து அவர்களை தாக்கியதுடன், அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர்களை தாக்கியவர்கள் கொச்சை தமிழில் பேசயதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/194751.html
யாழ் ஆனைக்கோட்டையில் 3 இளைஞர்கள் மீது மர்ம நபர்கள் வாள்வெட்டு!(படங்கள் இணைப்பு) |
ஆனைக்கோட்டை சந்தி வழியாக தமது வீட்டுக்கு இரவு 8 மணியளவில் மூன்று இளைஞர்கள் மூன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை ஜீப்பில் வந்த நான்கு பேர் அவர்களை மறித்து அவர்கள் மீது தாக்குதல் நடாத்தி உள்ளனர். அத்துடன் இளைஞர்களின் மோட்டார் சைக்கிளை வாளினால் வெட்டி சேதமாக்கியுள்ளனர். ஆணைக்கோட்டை சாக்கோட்டை மற்றும் காக்கை தீவு பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். . அதேவேளை தாக்குதலாளிகள் அங்கிருந்து செல்லும் போது மோட்டார் சைக்கிள் திறப்புக்களையும் தம்முடன் எடுத்து சென்றுள்ளனர். தற்போது தாக்குதலுக்கு இலக்கான மூன்று இளைஞர்களும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
26 Oct 2016 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1477474507&archive=&start_from=&ucat=1& |
Geen opmerkingen:
Een reactie posten