தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 november 2012

லண்டனில் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை: லூசியம் பகுதியில் பரபரப்பு !


லண்டனில் புறநகர்ப் பகுதியான லூசியம் என்னும் இடத்தில், நூல் நிலையம் ஒன்றிற்கு முன்னதாக தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு 9.20க்கு இச் சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், குறிப்பிட்ட தமிழ் இளைஞரை மீட்டு அம்பூலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் காலை வைத்தியசாலையில் இறந்துவிட்டதாக JVP இணையம் அறிகிறது. நேற்று முன் தினம், மாலை 9.20 மணியளவில் கூட்டமாக வந்த ஒரு குழு, மேற்படி குறிப்பிட்ட தமிழ் இளைஞரை தாக்கியுள்ளது. அத்தோடு துப்பாக்கிச் சத்தமும் கேட்டதகா சம்பவ இடத்தில் நின்றிருந்த மக்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் நடந்த சாலையை, முற்றாக மூடிய பொலிசார் போக்குவரத்துக்கு அனுமதிக்கவில்லை. தடய நிபுணர்கள் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு பாரிய தேடுதல் நடத்தப்பட்டது. இருப்பினும் இவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்துப் பொலிசார் இதுவரை சரியான தகவல் எதனையும் வெளியிடவில்லை. இது இவ்வாறு இருக்கையில், இறந்த தமிழர் யார் என்று தாம் கண்டுபிடித்துள்ளதாகவும், அவரின் உறவினர்களுக்கு தாம் தகவலைச் செல்லியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். சில காரணங்களுக்காக தாம் பெயரை வெளியிட விரும்பவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒரு குழுவாக வந்த சிலரே இத் தமிழரை பலமாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து யாராவது அறிந்திருந்தால்,  JVP இணையத்தை தொடர்புகொள்ளவும். பொலிசார் மேலதிக தகவல்களை எதிர்பார்க்கிறார்கள்:
A MURDER investigation has been launched following the death of a man in Lewisham.
Officers were called at around 9.20pm yesterday to reports of a disturbance in Lewisham High Street near Lewisham Library.
A 22-year-old man was taken to hospital by ambulance suffering from serious injuries and he died in the early hours of this morning (November 11).
Police believe they know the identity of the deceased, but await formal identification.
Next of kin have been informed.
A post-mortem examination is set to take place this afternoon at Greenwich Mortuary.

Geen opmerkingen:

Een reactie posten