ஆஹா இலங்கையின் என்னதான் நடக்கிறது ? சிங்கள் மாணவர்கள் யாழ் மாணவர்களுக்கு ஆதரவு !

யாழ் பல்கலைக்ககை மாணவர்கள் மீது இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நடாத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பெரும்பாலும் சிங்கள மாணவர்களே கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் பேரதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்டது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. பல்கலைக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள கலகா சந்தியில் இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சுலோக அட்டைகளுடன் பெரும்பாலான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நடந்த முதலாவது ஆர்ப்பாட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்க விடையம்.
இதே வேளை மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைக் கழகத்திலும் சிங்கள மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ் பல்கலைக் கழக மாணவர் மீது கை வையாதே !, மாணவர்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்து ! போன்ற சுலோகங்களுடன் போராட்டம் நடைபெற்றது. புலம் பெயர் நாடுகளில் இது வரை நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று இந்த மாணவர் எழுச்சியையும் இனவாதப் போராட்டமாக மாற்றுவதற்கு முயற்சிக்காமல் மாணவர்களின் நலன் சார்ந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளின் போராட்டமாக ஆதரவுப் போராட்டங்கள் நடத்தப்படும் என எதிர்பார்போம்.
அத்தோடு யாழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாக, புலம்பெயர் நாடுகளில் பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்பட இருக்கிறது. இதற்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4083
Geen opmerkingen:
Een reactie posten