தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 november 2012

நாடு கடத்தப்படும் தமிழ் அகதிகள் – கனடியத் தேசிய வானொலி!!


கனடியத் தேசிய வானொலியின் தற்போதைய நிலவரம் நிகழ்ச்சியின் தொகுப்பாளிணி அன்ன மரியாவிற்கும் நாடு கடத்தப்படவுள்ள இரண்டு தமிழ் அகதிகளிற்குமிடையேயான சந்திப்பு
காலை வணக்கம், எனது பெயர் அன்னா மரியா றெமோன்ரி. நீங்கள் இப்போது கரண்ட் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
இரண்டு வருடங்களுக்கு முதல் சன் சீ கப்பல் நூற்றுக்கணக்கான தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களைக் கொண்டு கனடியக் கடலுக்குள் நுழைந்தது. அதில் சிலருடைய பயணம் இன்றும் தொடர்கிறது.
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் விக் ரோஸ் கூறுகிறார்… சண் சீ கப்பலும் அதில் உள்ள ஆட்களைக் கடத்துவோர், பயங்கரவாதிகள் உட்பட்ட 490 பேரும் கனடியக் கரையோரத்திற்கு தற்செயலாக வரவில்லை.
பொருட்கள் ஏற்றும் கப்பலில் வந்த இந்த பயணிகள் அனைவரும் கரையை அடைந்த போது, உண்மையான அகதிகள் தானா என்பதில் அமைச்சர் சந்தேகங்கள் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 500 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான டொலர்களைச் செலவிட்டு மூன்று மாதப் பயணத்தின் பின் வந்தனர். அரசாங்கம் இதில் வந்த பலரும் புலிகள் இயக்க உறுப்பினர் என்று சந்தேகம் கொண்டிருந்தது. இதுவரையும் இருபது அகதிக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 35 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒருவர் இலங்கைக்கும் இன்னொருவர் இந்தியாவிற்கும் என இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாங்கள் ஜோன் என்று குறிப்பிடும் ஒருவர் இன்னும் மூன்று வாரங்களுக்குள் நாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டுள்ளார். கடந்த வருடமாக இவர் ரொறன்ரோவில் வேலை செய்து வருகிறார். அவர் நாடு கடத்தப்பட்டால், அவருக்கு இலங்கையில் ஆபத்து நேரக் கூடும் என்பதால் நாங்கள் அவரது பெயரை வெளியிடாமல் இருக்க சம்மதித்துள்ளோம். நாங்கள் அவரது மொழிபெயர்ப்பாளர் மூலமாக அவருடன் பேசுகிறோம். அத்துடன் அவரை கனடாவில் வைத்திருக்க முயற்சி செய்யும் அவரது தொழில் வழங்குனர் டேவிட் ரின்மவுத் உடனும் பேசுகிறோம்.
அன்னா மரியா… ஜோன் நீங்கள் எப்படி கனடா வந்தீர்கள் என்பதைக் கூறுங்கள்.
(ஜோன் தமிழில் பதிலளிக்க அவரது மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் கூறுகிறார்)
ஜோன்… நான் தாய்;லாந்திலிருந்து கப்பல் மூலமாக கனடா வந்தேன்.
அன்னா மரியா… நீங்கள் இலங்கையை விட்டு வெளியேறிய போது என்ன நடந்தது? எப்படி தாய்லாந்துக்கு சென்றீர்கள்?
ஜோன்… யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் நான் வன்னியில் வசித்தேன். அங்கு எனக்கு ஒரு கார் திருத்தும் கராஜ் இருந்தது. யுத்தம் தீவிரமடைந்த போது நான் இராணுவத்திடம் சரணடைந்தேன். அங்கு நான் முகாமில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டேன். அவர்கள் என்னைச் சந்தேகித்தார்கள். கடுமையாகத் தாக்கப்பட்டு, உண்மையில் நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். வைத்தியசாலையிலிருந்து தப்பித்து நான் தாய்லாந்து வந்தேன். அங்கிருந்து பின்னர் கனடா வந்தேன்.
அன்னா மரியா… நான் இடையில் குறுக்கிடாமல் ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் சித்;திரவதை செய்ததாக கூறிய போது, தப்புவதற்கு முன்பாக இராணுவம் உங்களுக்கு என்ன செய்தது?
ஜோன்… கிட்டத்தட்ட 1500 பேர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். புலிகள் ஒருபக்கமும் இராணுவம் ஒருபக்கமுகமாக இருந்தது. நாங்கள் புலிகளின் எல்லையைக் கடந்து வந்த போது, இரண்டு தரப்புக்கும் இடையில் நாங்கள் சிக்குண்டோம். அவர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள். இராணுவம் நாங்கள் எல்லோரும் இறந்து விடுவோம் என்று நினைத்தது. அவர்கள் எங்களிடம் வரவில்லை. அங்கே நாங்கள் மூன்று நாட்கள் இருந்தோம். பின்னர் அவர்கள் வந்து எங்களைக் கைது செய்தார்கள். பின்னர் இளைஞர்களைப் பிரித்து கொட்டில்களுக்குள் வைத்து எங்களைத் தாக்கினார்கள். நாங்கள் புலி உறுப்பினர்களா என்று கேட்டுத் தாக்கினார்கள். எனக்கு கழுத்தில் ஒரு மட்டையைக் கட்டி, அதில் நான் ஒரு புலி உறுப்பினர் என்று எழுதி என்னைச் சுட்டுக் கொல்லப் போவதாகக் கூறினர். இது கிட்டத்தட்ட எங்கள் எல்லோருக்குமே நடந்தது. அதிட்டவசமாக ஐ.நா அகதிகள் அமைப்பு வந்து எங்களை வெளியில் எடுத்தது. அவ்வாறாகத் தான் நாங்கள் தப்பினோம்.
அன்னா மரியா… உங்களுடைய பக்கம் என்று கருதப்படும் பக்கத்திலிருந்து நீங்கள் தப்பியிருக்கிறீர்கள். நீங்கள் புலி உறுப்பினர் இல்லை என்கிறீர்களா?
ஜோன்… கட்டாயமாக. எனக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அன்னா மரியா.. நாங்கள் இப்போது மேற்குக் கரைக்கு கப்பல் வந்தது பற்றிக் கேட்டோம். உங்கள் பயணம் பற்றிச் சொல்லுங்கள். எவ்வளவு நாள் சன் சீ கப்பலில் இருந்தீர்கள்?
ஜோன்… நாங்கள் 85 நாட்கள் கப்பலில் இருந்தோம். அது மிகவும் கஷ்டமான அனுபவம். நாங்கள் கரைக்கு வந்த போது, மறுபிறப்பு அடைந்ததாக உணர்ந்தோம். எங்களுக்கு உணவோ, நீரோ இல்லை. இறந்த ஒருவரைக் கடலில் எறிய நேரிட்டது. நாங்கள் கனடாவிற்கு வருவதற்கு முன் எங்கள் எல்லோருக்கும் இது தான் நடக்கும் என நினைத்தோம். சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்தோம். கனடியக் கரைக்கு உயிரோடு வருவோம் என்று கூட நினைக்கவில்லை.
அன்னா மரியா… கப்பலில் ஏறப் பணம் செலுத்தினீர்களா?
ஜோன்.. கட்டாயமாக. நாங்கள் கப்பலில் ஏறுவதற்கு 26 ஆயிரம் டொலர்கள் கேட்டார்கள். இங்கே வந்த பின்னர் இலங்கையில் உள்ள எனது குடும்பத்தினரிடம் ஐம்பாயிரம் டொலர்கள் கேட்டார்கள். இது இப்போதும் தொடர்கிறது.
அன்னா மரியா… அவர்கள் இப்போதும் பணத்தைக் கேட்கிறார்கள்.
ஜோன்… ஆம். அவர்கள் பணத்தைக் கேட்க வந்தார்கள். அதற்கு வழிகள் செய்தோம். இப்போதும் நான் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
அன்னா மரியா… கனடியக் கரைக்கு வந்த போது என்ன நடந்தது?
ஜோன்… நாங்கள் கரையை அடைந்த போது, மக்களும் கனடிய அரசும் எங்களை நன்றாகக் கவனித்தார்கள். நாங்கள் சொர்க்கத்தில் இருக்கிறோம் என நினைத்தோம். நான் சொர்க்கத்தைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறேன். நினைத்திருக்கிறேன். கனடா வந்த போது உண்மையிலேயே சொர்க்கத்தில் இருப்பதாகவே நினைத்தேன். இலங்கை ஒரு நல்ல நாடு தான். ஆனால் அரசாங்கம் மோசமானது. அது எங்களைக் கவனிக்கவில்லை. இங்கே அதற்கு முரணாக இருக்கிறது. எங்களை நன்றாக நடத்தினார்கள். கனடா எங்களுக்கு உதவி செய்ததால் நானும் கனடாவிற்கு பதிலுபகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். கனடாவில் நல்ல பிரஜையாக வாழ வேண்டும் என்று நினைத்தேன்.
அன்னா மரியா… நீஙக்ள் கனடாவில் இருந்த போது கனடிய அதிகாரிகள் எவ்வளவு காலம் உங்களைத் தடுத்து வைத்தார்கள்?
ஜோன்… ஏழு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்.
அன்னா மரியா.. நீங்கள் விடுவிக்கப்பட்ட பின்னால் நீங்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்தீர்கள். எப்படி ரொறன்ரோ வந்தீர்கள்?
ஜோன்.. நான் வன்கூவரில் இறங்கிய போது, அங்கு மிகவும் சிறிய தமிழ்ச் சமூகமே இருந்தது. எனக்கு கனடாவில் யாரும் இல்லை. வன்கூவரில் வேலை தேடிய போது, அதிட்டம் இருக்கவில்லை. எனவே ரொறன்ரோவில் முயற்சிப்போம் என்று நினைத்து ரொறன்ரோ வந்தேன்.
அன்னா மரியா… டேவிட் ரின்மவுத்… இங்கே தான் நீங்கள் வருகிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் ஜோனுக்கு எப்படி வேலை வழங்க நேரிட்டது?
டேவிட்… நாங்கள் அப்போது பல வித்தியாசமானவர்களை வேலைக்கு அமர்த்தினோம். தற்காலிக அடிப்படையில். எங்கள் வர்த்தகம் பெருத்த போது, எங்களுக்கு ஆள் தேவைப்பட்டது. நிரந்தரமாக வேலை செய்யக் கூடியவர். இதில் ஜோன் சிறந்த வேலையாளாக இருந்தார். மதிப்புக்குரியவராக இருந்தார். எனவே முழுநேரத்திற்கு அவரை வேலைக்கு சேர்த்தோம்.
அன்னா மரியா.. அவர் திறமையான வேலையாளா?
டேவிட்… ஆம். சிறந்த வேலையாள். அவர் எங்கள் நிறுவனத்திற்கு முக்கியமானவர். அவர் சுவர் நிர்மாணிப்பது முதல் நிலத்தை செய்வது வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்கிறார்.
அன்னா மரியா… எப்படி, எப்போது அவர் நாடு கடத்தப்படப் போகிறார் என்பதை அறிந்தீர்கள்?
டேவிட்… அவர் ஒரு அகதி என்பது தெரியும். அவர் வேலை செய்ய முடியும். அவரது அகதிக் கோரிக்கை பற்றிய முடிவு பற்றி மார்ச்சில் வந்த போது, அந்தக் கடதாசியை அவர் கொண்டு வந்தார். அதை நாங்கள் அவருக்கு மொழி பெயர்த்தோம். அப்போது தான் நாங்கள் அது பற்றி அறிந்து கொண்டோம். அப்போது அவருக்கு இன்னொரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்தோம். அவரது மேன்முறையீடு கேட்கப்படவில்லை என்று அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டோம். இந்தக் கட்டத்தில் இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் அக்கறையுள்ளவர்களாக இருந்தோம்.
அன்னா மரியா… ஜோன்.. யுத்தம் முடிந்து விட்டது. ஏன் இலங்கைக்கு திரும்ப நீங்கள் தயங்குகிறீர்கள்?
ஜோன்… அரசாங்கம் மட்டும் தான் யுத்தம் முடிந்து விட்டது என்று கூறுகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் சித்திரவதையாலும் கொலைகளாலும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். புலனாய்வுத் துறை இப்போதும் தமிழர்கள் புலிகளுடன் தொடர்புள்ளவர்களா என இப்போதும் பார்க்கிறது. சந்தேகத்தில் கூட அவர்களைத் தேடிச் செல்கிறது. எங்களோடு வந்த ஒருவர் நாடு கடத்தப்பட்டு தற்போது தடை முகாமில் சித்திரவதை செய்யப்படுகிறார். அவர் அவ்வாறு நடத்தப்படுவதால், எனக்கும் அப்படித் தான் நடக்கும் என்று நினைக்கிறேன். என் விடயத்தில் மிகவும் கடுமையாக இருக்கும், ஏனெனில் நான் முகாமில் இருந்த தப்பியிருந்தேன். அவர்களிடம் என்னுடைய படம் இருக்கிறது. நான் விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே அவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள். என்னைக் கொண்டு சென்று அவருக்கு நடந்தது போலவே எனக்கும் நடக்கும். நான் போனால் திடீனெ;று என் வாழ்க்கையும் ஆபத்தில் இருக்கும்.
அன்னா மரியா… டேவிட்… மற்ற தொழில் வழங்குனர்கள் தற்போது வேறு வேலையாட்களைத் தேடுவார்கள். எதற்காக ஜோன் விடயத்தில் நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள்?
டேவிட்… ஜோன் விடயத்தில் அது இலகுவாகத் தான் ஆரம்பித்;தது. அவர் கடும் உழைப்பாளி. நல்லவர். ஆனால் செல்லச் செல்ல, எந்த நாட்டில் நீங்கள் வாழ விரும்புகிறீர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. எந்த வித சிந்தனையும் இல்லாமல் மோசமான விடயங்களை எதிர்கொள்ள மக்களைக் கட்டி விமானத்தில் அனுப்பும் நாட்டில் வாழ விரும்புகிறீர்களா?
அன்னா மரியா… இது ஒரு உணர்வு பூர்வமாக போராட்டம் உங்களுக்கு?
டேவிட்… ஆம். கொஞ்சம்.
அன்னா மரியா… நீங்கள் அவர் பற்றிக் கவலைப்படுகிறீர்களா?
டேவிட்… ஆம்.. அவர் பற்றி கொஞ்சம் கவலைப்படுகிறேன். உங்களுக்குத் தெரியும். ஜோன் இங்கே செய்ய விரும்பும் விடயம் போல, தங்கள் சாதாரண வாழ்வை கட்டியமைக்க விரும்பும் சாதாரண மக்களுக்காக எழுந்து நிற்கும் ஒரு நாட்டின் பகுதியாகத் தான் நான் விரும்புகிறேன். அப்படியான ஒரு நாட்டுக்குத் தான் இருபதுகளில் எனது பேத்தி அயர்லாந்தில் இருந்து வந்த போது, வந்தார்.
அன்னா மரியா… உங்கள் நிறுவனத்தில் உள்ள மூவரில் இவரும் ஒருவர். அவரை இழப்பதில் உள்ள பிரச்சனை என்ன?
டேவிட்… இது எனது நிறுவனத்திற்கு கஷ்டமாக இருக்கும், ஏனென்றால் எங்களுக்கு இடையில் நல்ல உறவு இருக்கிறது. அவர் ஒரு திறமையான வேலையாள். அவர் போனால் அவரது இடத்தை நிரப்ப இன்னொருவரைக் கண்டுபிடிப்பது கஷ்டம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அன்னா மரியா.. வந்து உங்கள் கதையைப் பகிர்ந்து கொண்டதற்கு இருவருக்கும் நன்றி.
இது டேவிட் ரின்மவுத். இவர் வீடு திருத்தும் நிறுவனம் ஒன்றை ரொறன்ரோவில் வைத்திருக்கிறார். அவரது வேலையாளான ஜோன், தனது அகதிக் கோரிக்கையில் தோல்வியடைந்து விட்டார். அடுத்த மாதம் அவர் நாடு கடத்தப்பட உள்ளார். ராகவன் பரஞ்சோதி மொழி பெயர்ப்பில் ஈடுபட்டார். ஏற்கனவே ஜோன் இலங்கையில் சித்திரவதை செய்யப்பட்டதால், மீண்டும் சித்திரவதை செய்யப்படுவார் என ஜோனின் சட்டத்தரணி தெரிவிக்கிறார். எங்கள் ரொறன்ரோ ஸ்ரூடியோவில் ஹடயாற் நசாமி கலந்து கொள்கிறார்.
அன்னா மரியா… உங்கள் தரப்பாரின் அகதிக் கோரிக்கை மார்ச்சில் நிராகரிக்கப்பட்டது. தற்போது டிசம்பரில் நாடு கடத்தப்பட உள்ளார்.
நசாமி… சரியானது.
அன்னா மரியா… என்ன அடிப்படையில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது?
நசாமி… அவரது கோரிக்கையின் முக்கிய பகுதிகள் நம்பக் கூடியவை என்று ஒரு உறுப்பினர் கண்டு கொண்டார். அவர் சித்திரவதை செய்யப்பட்டார். இராணுவ முகாமில் இருந்தார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, முகாமிலிருந்து தப்பினார். ஆகவே இந்த விடயங்கள் சரியானவையும் நம்பக் கூடியவையும். அந்த உறுப்பினர் இலங்கை அரசாங்கம் இவரில் அக்கறை காட்டாது, ஏனெனில் அவர் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறினார், அவருக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை, எனவே அவருக்குப் பிரச்சனை இருக்காது என்று நம்பினார்.
அன்னா மரியா… மற்ற வார்த்தைகளில் கூறுவதாயின், கனடிய அரசு இவர் புலிகளுடன் தொடர்பானவை என்று கூறவில்லை, இவரைச் சந்தேகப்படவில்லை.
நசாமி.. இவருக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை என்று அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
அன்னா மரியா.. இவர் திருப்பி அனுப்பப்பட்டால், துன்புறுத்தப்படுவார் என்று அவர்கள் நினைக்கவில்லை என்றே கூறுகிறார்கள்.
நசாமி.. சரி.
அன்னா மரியா… அவரது கோரிக்கை மார்ச்சில் நிராகரிக்கப்பட்டது. அவர் மேன்முறையீடு செய்ய சட்டரீதியான தறுவாய்கள் உள்ளனவா?
நசாமி… அது தான் பிரச்சனை. உங்களுக்கு நினைவிருக்கும். அமைச்சர் கெனி குடிவரவுக் கொள்கையில் சமீபத்தில் மாற்றங்கள் செய்தார். அதில் முக்கியமான மாற்றம், உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு ஆபத்துப் பற்றிய மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியாது. முன்பு உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், முடிவில் உங்கள் கோப்பை மீளப் பரிசீலிக்க ஒரு சந்தர்ப்பம் உண்டு. அதன்படி உங்களை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பாக, உங்களுக்கு சித்திரவதைக்கான சந்தர்ப்பம் உண்டா, புதிய தகவல்கள் ஏதாவது சேர்க்கப்பட வேண்டுமா என்பதை ஒரு அதிகாரி மதிப்பீடு செய்ய முடியும். அந்தத் திட்டம் மிகச் சிறந்ததல்ல. ஆனால் இப்போது உள்ளதை விட மோசமானதல்;ல. இப்போது இவரும் மற்றவர்களும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். இது தான் பிரச்சனை. துரதிட்ட வசமாக குடிவரவு அகதிகள் சபையில் தீர்மானம் எடுப்போர் மிகவும் பல்வேறு வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இந்த விடயத்தில், இன்னொரு உறுப்பினர் இன்னொருவர் விடயத்தில் ஒரே சூழ்நிலையில் முரண்பாடான முடிவுகளை எடுத்துள்ளனர்.
அன்னா மரியா… வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மற்றவர் இங்கே தொடர்ந்தும் இருக்கலாம்.
நசாமி.. மற்றவர் இருக்கலாம். எனது தரப்பினரின் கோரிக்கையை இன்னொரு உறுப்பினர் விசாரித்திருந்தால், அவரும் இங்கே இருக்க முடியும். அவரை ஒரு அகதியாக ஏற்றுக் கொண்டிருப்பர். இந்த இரண்டு முடிவுகளையும் அவதானித்தால், இரண்டு உறுப்பினர்களும் மிகவும் முரண்பாடான முடிவுகளுக்கு வந்துள்ளனர்.
அன்னா மரியா.. இந்த அடிப்படையில் நீங்கள் மேன்முறையீடு செய்ய முடியாது என்று சொல்கிறீர்கள்.
நசாமி.. சமஷ்டி நீதிமன்றம் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை பரிசீலிக்குமாறு கேட்க சந்தர்ப்பம் உண்டு. இந்த விடயத்தில், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அன்னா மரியா… எனவே சட்டரீதியாக நீங்கள் என்ன செய்ய முடியும்? அவர் இங்கே நிற்க வேண்டும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.
நசாமி… இந்த விடயத்தில் புதிய ஆதாரங்கள் உள்ளன. இவரது முடிவுக்கு முரணான முடிவுகளை மற்ற உறுப்பினர்கள் எடுத்த சம்பவங்களும் உள்ளன. எனவே காரணங்கள் உண்டு. சரியான மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதற்கு பொருத்தமான கோரிக்கை இது. பிரச்சனை என்னவெனில், அந்த கடைசி நேர ஆபத்து மதிப்பீட்டைச் செய்வதை சட்டம் நிறுத்தி விட்டது. எனவே இவருக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. நாங்கள் செய்யக் கூடியது, கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு வருடம் கடக்கும் வரைக்கும் புதிய ஆதாரங்களின் அடிப்படையில் நாடு கடத்தலை ஒத்தி வைக்கும்படி கனடிய எல்லைச் சேவை அதிகாரிகளை நம்ப வைப்பது தான். ஒரு சரியான தகுதி வாய்ந்த அதிகாரி இந்த விடயத்தை விசாரிக்க வைப்பது தான். அவர்கள் மறுத்தால் நாங்கள் சமஷ்டி நீதிமன்றத்திற்கு சென்று நாடு கடத்தலைத் தடுக்கலாம். இதற்காக நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் துரதிட்ட வசமாக இது அதிட்டம் சம்பந்தப்பட்டது. உங்களுக்கு யார் கிடைத்தது, யார் உங்களுடைய கோப்பைக் கவனித்தது என்ற விடயங்கள். இவ்வாறு நடக்க வேண்டிய தேவையில்லாமல் சரியான பொறிமுறைகள் இருந்திருக்க வேண்டும்.
அன்னா மரியா… நன்றி, நசாமி. நசாமி ரொறன்ரோவில் உள்ள சட்டத்தரணி. நாங்கள் இது குறித்து குடிவரவு அதிகாரிகளிடம் பேட்டிக்கு கேட்ட போது, அவர்கள் அது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்ததுடன், கனடிய எல்லைச் சேவைகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டனர். ஆனால் அவர்களோ, நாடு கடத்தல் உத்தரவை நிறைவேற்றும் தங்கள் பணி பற்றியும் எழுத்து மூலமாக குறிப்பிட்டதுடன், நாடு கடத்தல் உத்தரவு பெற்ற ஒவ்வொருவரும் சட்டரீதியான முறைப்படியான செயற்பாட்டுக்கு உரிமையுள்ளவர்கள் என்றும் அந்த செயற்பாடு முடிவடையும் வரைக்கும் ஒருவரும் நாடு கடத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கீத் பெஸ்ட் சித்திரவதையிலிருந்து விடுதலை என்ற அமைப்பின் நிறைவேற்று அதிகாரி. இங்கிலாந்தில் இலங்கை அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்துமாறு கோரி செயற்படும் அமைப்பு அது. அதன் ஆய்வுப்படி இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழர்களை சித்திரவதை செய்கிறது. ஹலோ கீத். உங்களுடைய ஆய்வு பற்றிக் கூறுங்கள். நீங்கள் தாங்களாகவே வெளியேறும் அகதிகள் பற்றி ஆய்வு செய்தீர்கள், இல்லையா?
கீத்… நாங்கள் தேசிய தர்மஸ்தாபனம். உலகெங்கும் இருந்து இங்கிலாந்திற்கு வரும் சித்திரவதையால் துன்புற்றோருக்கு உளவியல் உதவிகளை வழங்குவதே எங்கள் முக்கிய செயற்பாடு. கடந்த வருடம் தமிழ் சித்திரவதைக்குள்ளானோர் பற்றிய மருத்துவ சட்ட விடயங்கள் பற்றி ஆய்வு செய்தோம். எங்களிடம் தாங்கள் மே 2009 யுத்த முடிவின் பின்னர் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறி வந்தவர்களின் விடயங்களை ஆராய்ந்த போது, அந்த அறிக்கைகள் இவர்கள் இலங்கை அரசால் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதைக் காட்டின. இதை நீங்கள் எங்கள் இணையத் தளமான சித்திரவதையிலிருந்து விடுதலையில் (குசநநனடிஅ கசடிஅ கூடிசவரசந) காணலாம். அந்த அறிக்கையின் பெயர் டீரவ டிக வாந ளுடைநnஉந ஆகும். பின்னர் இவர்கள் குறித்த விசாரணையில் நாங்கள் தலையிட அனுமதி வழங்கப்பட்டது. அங்கு 24 பேரின் விசாரணைகளுக்கு மேலதிக ஆதாரங்களை நாங்கள் வழங்கினோம்.
அன்னா மரியா… இவையெல்லாம் நாடு கடத்தல் விசாரணைகள்..
கீத்… இல்லை. இவர்கள் எல்லாம் தாங்களாகவே திரும்பிச் சென்றவர்கள். இதில் ஒருவர் தனது உறவினரின் மரணச்சடங்குக்கு சென்ற போது வெள்ளை வானில் கடத்தப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, எரியும் இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்டார்.
அன்னா மரியா… எதைச் சொல்ல வருகிறீர்கள்?
கீத்.. சூடான கம்பி ஒன்றினால். இது பலரை வேண்டுமென்றே பயத்துக்குள்ளாக்குகிறது. இவர்கள் பின்னர் பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்கு வந்தால் சிறிய சோதனையின் பின் இவர்கள் முன்னரும் கவனிக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுவதற்காக என்றே நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் தலையிட்ட விசாரணைகளில் என்ன நடந்தது என்பது சுவாரஷ்யமானது. எங்களுடைய ஆதாரங்கள் பற்றி பாராட்டி, அவற்றில் தங்கி முடிவுகளை எடுத்த நீதிபதி சொன்னார், புலிகளோடு உண்மையான தொடர்போ, அல்லது சந்தேகிக்கப்பட்டவர்களோ இலங்கைக்கு திரும்பும் பட்சத்தில் சித்திரவதை செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்பது தௌpவாகிறது என்று. ஆனால் பிரிட்டிஷ் அரசும் அதன் உள்துறை அலுவலகமும் நீதிபதி தவறாக முடிவு எடுத்து விட்டார் என்று கூறின. அவர்கள் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
அன்னா மரியா… இதை தௌpவுபடுத்த விடுங்கள். இந்த நாடு கடத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
கீத்.. நீதிபதி தெரிவித்தார், இதில் பொதுவான வகைப்படுத்தல் இல்லை. ஒவ்வொரு விசாரணையும் தனித்துவமாகக் கருதப்பட வேண்டும் என்று. எல்லோருக்கும் ஆபத்து இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் புலிகளோடு தொடர்புடையவர்கள், அவ்வாறு கருதப்படுவர்களுக்கு ஆபத்து உண்டு. இந்த தலையீடுகளால் உண்மையில் நாடு கடத்தப்பட இருந்தவர்கள் விமானத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார்கள்.
அன்னா மரியா… என்னைக் கேட்க விடுங்கள். அரசாங்கம்… அரசாங்கத்தில் இருக்கும் எல்லோரும் இதனால் மகிழ்ச்சியடையவில்லை. தற்போதைய பிரிட்டிஷ் அரசியல் சூழல் என்ன? அது எவ்வாறு இவ்வாறான விடயங்களைப் பாதிக்கிறது?
கீத்… கனடாவில் தற்போது கருத்துக்கள் இறுகி வருகின்றன. குடிவரவு, அகதிகள் போன்றன குறித்து எதிர்ப்புணர்வு அதிகரித்து வருகிறது. இது துயரமானது.
அன்னா மரியா… இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் அகதி நிலை கோரும் தமிழர்களை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
கீத்… உண்மையான ஆபத்துக்கள் பற்றி சரியான சோதனைகள் செய்யப்பட வேண்டும். அ;நத ஆபத்துக்கள் நாளாந்தம் மாறி வருகிறது. காரணம் குடியேறும் நாடுகளில் மனநிலை மாறி வருகிறது. இங்கே சட்டத்தரணி கூறியதுபோல, ஆரம்ப முடிவை சரியாகப் பெறுவது முக்கியமானது.


எனது கருத்து:-ஆமாம்,நமக்கு அமையும் அதிகாரி நமது பிரச்சனைகள் பற்றி அறிந்தவராகவும் மனிதாபிமானமுள்ளவராகவும் இருந்தால் தஞ்சம் கிடைக்கும் சாத்தியம் அதிகம்,ஆனால் அப்படியான நன்மைனமுள்ளவர்களை பதவியில் அரசுகள் பதவியில் அமர்த்துவதில்லை,அரசுகள் அப்படியானவர்களை பதவி நீக்கம் செய்வதோடு கடும்போக்காளர்களையும் இனவெறியர்களையுமே இப்பதவிகளுக்கு தெரிவுசெய்கின்றன!!காரணம் அகதி அந்தஸ்த்து கொடுக்கும் சட்டத்தை மாற்றவோ,நிறுத்தவோ அரசுகள் முயல்வதில்லை,அவை மனிதாபிமான நடைமுறைகள்,நிறுத்தினால் அவர்களுக்கு அவமானம்,அகதிகளை உள்ளே வரவிட்டு விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தி ரசித்துவிட்டு காரணமில்லை என்று கூறும் மனிதாபிமானமற்ற செயல்கள்தான் இன்று அதிகம்!!மனிதாபிமானம் பேணப்படுவதாக குடி மக்களும் நம்புவர்!வேதனைகளை மீட்டவும் துன்பங்களை நினைவு கூர்ந்து துயரப்படவுமே விசாரணைகள்!எனினும் ஒரு சிலருக்கு அகதி தஞ்சம் கிடைக்கின்றது!காரணம் யாராவது சிலருக்கு கொடுப்பதுமூலம் நியாயமான முறையில் உண்மையான அகதிகளை ஏற்கின்றோம் என்று காட்டவே!!உண்மையான அகதி என்பதை அழுவது மூலமும் சிறந்த நடிப்பின் மூலமும் எப்படி கண்டு கொள்கிறார்களோ!!எனக்கு தெரிந்து உண்மையில் பாதிக்கப்பட்டவர்களே நிராகரிக்கப்பட்டு மேலும் துன்பப்படுபவர்கள்!!

http://www.canadamirror.com/canada/2238.html

Geen opmerkingen:

Een reactie posten