பிரான்சில் நிரந்தர வதிவிட உரிமையற்றோருக்கான புதிய நடைமுறைகள்.
பிரான்சுவா ஒல்லோந்த் தனது தேர்தற்பிரச்சாரத்தில் பெரிய அளவிலான, வதிவிடஉரிமையற்றோருக்கு ஒரேயடியாக வதிவிடஉரிமை வழங்குவதை எதிர்திருந்தாலும்தெளிவான சட்டவரையறை மூலமாகவகை பிரித்து தகுதியானவர்களுக்கு நிரந்தரவதிவிட உரிமை வழங்குவதாக வாக்குறுதிகொடுத்திருந்தார்.
ஒவ்வொரு நகரக் காவற்துறைத் தலைமை இல்லங்களையும் (Préfecture)ஒருங்கிணைத்து ஒரே சட்ட அடிப்படையில் செயற்பட வைக்கத் தெளிவான சட்டவரைமுறைகள் வரையப்பட்டுள்ளன. இதனை இன்று புதன்கிழமை நகரக் காவற்துறைத்தலைமை இல்லங்களுக்கான சுற்றாக உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ்வெளியிட்டுள்ளார். இது பெரும்பாலான வதிவிட உரிமையற்றோருக்கு வதிவிட உரிமைவழங்குவதற்கு வழி வகுக்கும். ஆனாலும் ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும்வழங்குவதை மட்டுப்படுத்தும் என மனுவல் வால்ஸ் கூறியுள்ளார். இதன்சட்டமூலங்களையும் மாற்றங்களையும் பரிஸ் தமிழ் வாசகர்களுக்குத் தமிழில்தருகின்றோம். இதன் மூலம் எம் வாசகர்கள் பிழையான வழிகாட்டல்களுக்குள்சிக்காமலும் பணவிரயம் செய்யாமலும் சட்டமூலங்களை அறிந்து கொள்ள வேண்டும்என்ற நோக்கத்தில் இதனைத் தருகின்றோம்.
மனுவல் வால்ஸ் முன்னைய அரசாங்கம் கடைப்பிடித்தது போல் வருடத்திற்கு 30,000பேருக்கு வதிவிட உரிமை வழங்க முடிவு செய்துள்ளார். இன்னமும் கிட்டத்தட்ட350,000 பேர் முறையற்ற வதிவிட உரிமையற்றவர்களாக உள்ளார்கள் என பிரான்சின்உள்துறை அமைச்சுத் தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறைகள்
பெற்றோர்களுக்கு
மாற்றம்: 2006ல் இரண்டு வருடம் பிரன்சில் வசித்திருப்பதோடு பிள்ளை ஒரு வருடம்பாடசாலையில் படித்தால் நிரந்தர வதிவிட உரிமை கோறும் தகுதி வழங்கப்பட்டது.ஆனால் அதன் பின்னர் இந்த வகையான நிரந்தர வதிவிட உரிமை கோறல் முறையில்திட்டவட்டமான சட்டதிட்டங்கள் உருவாக்கப்படவில்லை. இனிமேல் மேற்கண்ட 5வருடச் சட்டம் அனைத்துப் பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படும்.
வதிவிட உரிமை உள்ள ஒரு வெளிநாட்டவரை மணம் முடித்தவருக்கு
வேலை செய்பவருக்கு
5 வருடங்கள் பிரான்சில் வசித்தமை நிரூபித்தல் வேண்டும். கடைசி இரண்டுவருடங்களில் தொடர்ந்து ஒரு இடத்தில் எட்டு மாதங்கள் வேலைபார்த்துக்கொண்டிருத்தல் வேண்டும். அல்லது 30 மாதங்கள் கடைசி ஐந்து வருடத்தில்தொடர்ச்சியாக வேலை செய்திருத்தல் வேண்டும். தற்போதைய வேலையின் அத்தாட்சிப்பத்திரம் வேண்டும். வேலைக்கான ஒப்பந்தப் பத்திரம் (un contrat de travail) அல்லதுவேலைக்குச் சேர்கப்படுவார் என்ற ஒரு நிறுவனத்தின் அல்லது கடையின்உறுதிப்பத்திரம் (une promesse d'embauche) தேவை.
ஏழு வருடங்கள் பிரன்சில் இருந்து கடைசி மூன்று வருடங்களுக்குள் 12 மாதங்கள்வேலை செய்திருந்தால் நகரக் காவற்துறைத் தலைமையகம் (Préfecture) நான்கு மாதவதிவிட அனுமதிப்பத்திரம் வழங்கும். இதன் மூலம் வேலை தேடிக் கொள்ளலாம். இதுமேலும் ஒரு முறை மட்டுமே நீட்டிக்கப்படும். வேலை தேடிக் கொண்டால்தொடர்ச்சியான வதிவிட உரிமை வழங்கப்படும். ஏனெனில் வதிவிட உரிமைகோருவதற்கு சம்பளச் சீட்டு (Bulletin de paie) முக்கியம். வதிவிட அனுமதியற்றவர்கள்பதிவு செய்யப்படாத வேலை செய்வது நிரூபிக்கப்பட முடியாது.
மாற்றம்: 2008 ற்கும் 2010 ற்கும் இடையில் வேலை மூலம் வதிவிட உரிமைபெறுவதற்கான நடைமுறையில் பல சுற்றுச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.முக்கியமாக பதிவு செய்யப்படாத வேலைகளிலிருந்து வதிவிட உரிமையற்றவர்கள்ஒழுங்கான நடைமுறையில் வருவதற்கான கதவுகள் திறக்கப்பட்டன. 5 வருடம்வசித்தமையும் ஒரே இடத்தில் 12 மாத வேலையும் கோரப்பட்டது. ஆனாலும் இதுஒவ்வொரு இடத்திலும் பாகுபாடுகளோடும் சமனற்ற முறையிலும்நடைமுறைப்படுத்தப்பட்டது. புதிய நடைமுறை இவற்றைத் தடுத்து சமமான முறையைஏற்படுத்தும்.
18 வயது இளைஞர்களுக்கு.
மாற்றம்: இதுவரை 13 வயதுற்கு முன்னர் பிரான்சிற்கு வந்த சிறுவர்களுக்கு மட்டுமேவதிவிட உரிமை வழங்கப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten