தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 november 2012

வன்னியிலிருந்து ஐ.நா. தானாக வெளியேறியதா? இலங்கை வெளியேற்றியதா?: சர்ச்சையில் இலங்கை !!



2009 இல் நடைபெற்ற யுத்தத்தின் போது வன்னியிலிருந்து ஐ.நா. தானாக வெளியேறியதா இல்லை இலங்கை வெளியேற்றியதா என்றரீதியில் இலங்கை தான் தம்மை வெளியேற்றியது என்கிறது ஐ.நா. ஆனால் அதை மறுக்கிறது இலங்கை.
முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக் கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களை பயமுறுத்தி பணிய வைத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்திருக்கிறது.
பொதுமக்களை பாதுகாக்க ஐநா தவறியது என்று தன்னைத் தானே ஐ.நா குற்றஞ்சாட்டிக் கொள்ளும் அந்த அறிக்கையில், ஐநா பணியாளர்கள் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதை குறைப்பதற்காக இலங்கை அரசாங்கம், அவர்களை மிரட்டி பணிய வைத்தது என்றும் கூறப்பட்டிருந்தது.
ஒரு சிறிய நாடு ஐநாவை பணிய வைத்தது என்று கூறுவது முற்றிலும் பொருளற்றது என்று ஐநாவுக்கான இலங்கை தூதுவர் கூறியுள்ளார்.
மேலும், கிளிநொச்சியில் பொதுமக்கள் ஐ.நா. அதிகாரிகளைப் பார்த்து எம்மை விட்டுச் செல்லவேண்டாம் என்று கண்ணீர்மல்க உயிர்ப்பிச்சை கேட்டபோதிலும் ஐ.நா. தானாகவே வெளியேறியதே தவிர நாம் அவர்களை அடிபணிய வைக்கவில்லை என ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச பணியாளர்களின் உயிர்களுக்கு தாம் பொறுப்பில்லை என இலங்கை அரசு அறிவிப்புக்களை வெளியிட்ட நிலையிலேயே ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் வன்னிப்பிராந்தியத்தில் இருந்து வெளியேறினர், அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டோம்., அதாவது இலங்கை அரசு நம்மை வெளியேற்றியது என்கிறது ஐ.நா. என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/show-RUmqzBSYOdgq3.html

Geen opmerkingen:

Een reactie posten