தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 20 november 2012

யார் துரோகி??துரோகம் செய்யாமல் சொல் வாகை LIVE TV!!

புலியை விட்டு விலகியதாக அறிக்கை கொடுத்த கருணா துரோகியா ,அவரை தேடி அழித்து இயக்கத்தை, தமிழ் மக்களை பலவீனமாக்கிய பிரபாகரன் துரோகியா தமிழருக்கு!!!!??

இவர்கள் தான் அந்த 12 தேச துரோகிகளும் !!!!!
Vaakai Livetv 20.11.2012http://www.livestream.com/vaakai

"துரோகி" என்ற பதம் எம்மிடையே மீண்டும் முணுமுணுக்க படுகின்றது அதனால் தேவை கருதி இக்கட்டுரை மீழ் பிரசுரமாகின்றது .



ஈழத் தமிழினத்தின் இன்றைய நிலைக்கு காலத்துக்கு காலம் இடம் பெற்ற துரோகச் செயல்பாடுகள் மட்டும் தான் காரணம் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

ஆதலால் முதலில் துரோகம் என்றால் என்ன என்பது பற்றி நாம் புரிந்துகொள்ளல் அவசியம்.
அதன் பின் துரோக செயல்பாடுகளை அடையாளம் காண வேண்டும்.
அதன் பின் அத்தகைய"பணியாளர்களை " (மாதசம்பளத்துக்கு வேலை செய்வோர் )அடையாளம் காணவேண்டும் என நம்புகின்றேன்.

எம்மில் எத்தனை பேர் துரோகம் என்றால் என்ன ? துரோகிகள் எவ்வாறு வராலாற்றில் கையாளப்படடனர் என ஆர்வம் காட்டி தேடல் நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றோம் . எதோ பெயரளவுக்கு துரோகம் என்ற சொல்லுக்கு மனதில் எழுந்த அர்த்தத்தை மட்டும் இருத்திக் கொண்டு தேசத் துரோகம் என்ற மிகப் பிரமாண்டமான விடயம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். எந்த விடயத்தையும் அடிப்படையாக ஆராய்ந்து அறிவு ரீதியாக
நாம்"எல்லோரும்"செயல் பட்டால் . எல்லா பொதுக் கூட்டங்களிலும் , எல்லாக் குடும்பங்களிலும் , எல்லா உறவுகளுக்கிடையேயும் சர்வ சாதாரணமாக இன்று நடை பெறும் முரண்பட்ட வாக்கு வாதங்கள் மனக் கசப்புக்கள் குறிப்பிட்ட அளவு குறையும். அதை விடுத்து எந்த விடயத்தலும் "அடிப்படை தேடல் இன்றி" மனதில் எழுந்தமான மாக வரும் வியாக்கியானங்களை ஜனத்திலேயே எல்லாம் தெரிந்த நிலையில் பிறந்தது போல் நினைத்து துரோகம் என்ற விடயத்துக்கு ஆளுக்கு ஆள் வியாக்கியானம் தேடுகின்றோம் .
துரோகம் என்பது மனித குல வரலாற்றில் புதிய விடயமல்ல. அப்பாவிதுரோகியாக்கப் பட்ட வராலாறு முதல் துரோகிஅப்பாவியாக வாழ்ந்த வரலாறும் உண்டு. ஆனால் துரோகிகள் நீண்ட நாள் தப்பியதாக வரலாறு இல்லை.

உலக வரலாற்றில் துரோகியாக அடையாளம் காணப்பட்ட முக்கியமான ஒருவரை பார்ப்போம் ,
Benedict Arnold V
முதலில் பிரசித்தி பெற்ற அமெரிக்க ஜனாதிபதியின் வார்த்தையில் " Judas sold only one man, Arnold three millions" எனக் விழிக்கப்பட்டு துரோகி என உலகில் அவமானப்படுததப்பட்ட Benedict Arnold V பற்றி சம்பவ விபரங்களுடன் பார்ப்போம். இந்த சம்பவம் பிரித்தானியாவுக்கு எதிரான அமெரிக்க சுதந்திர போரில் நடை பெற்றது .

அப்பொழுது வெளியான மதிப்பு மிக்க அரசியல் வார சஞ்சிகை இந்த சம்பவம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது . மகா மோசமான இந்த தேசத் துரோகத்தை சில மனிதர்கள் நடத்துகின்றார்கள் அவர்களுக்கு தேவதூதன் போல் இந்த பெனடிக்ட் ஆர்னோல்ட் விளங்குகின்றார் -a few men directing this colossal treason, by whose side Benedict Arnold shines white as a saint." எனக் குறித்துள்ளது .

ஹவார்ட் பல்கலைக் கழக தலைவராகவும் , மதகுருவாகவும் , தத்துவாசிரியராகவும் , வரலாற்று ஆசிரியராகவும் இருந்த Jared Sparks என்பவர் பெனடிக்ட் ஆர்னோல்ட் பற்றி எழுதிய The Life and Treason of Benedict Arnold, என்ற நூலில் பெனடிக்ட் ஆர்னோல்ட் குழந்தைப் பருவத்தில் இருந்தே துரோகத்தனமான பழக்க வழக்கம் கொண்டவராக பெனடிக்ட் ஆர்னோல்ட் இருந்திருக்கின்றார் எனக் குறிப்பிடுகின்றார் . "The Cruel Boy" என்ற சிறுவர்களுக்கான சிறுகதை ஒன்றும் பெனடிக்ட் அர்னோல்ட் ஒரு துரோகி என்பதை வர்ணித்து உருவகிக்கப்பட்டதே .
எனவே மதிப்பு மிக்க தலைவர்களாலும் , சிந்தனையாளர்களாலும் , எழுத்தாளர்களாலும் , பத்திரிகைகளாலும் துரோகம் என அடையாளம் காணப்பட்டு சிறுவர்களுக்கு மனதில் பதிய வைக்கவேண்டும் என்ற நோக்காடு கதை எழுதப்படுமளவுக்கு பெனடிக்ட் ஆர்னோல்ட் விடயம் முக்கியமானது என்பதால் முதலில் பெனடிக்ட் ஆர்னோல்டின் துரோகம் என அங்கீகரிக்கப்பட்ட விடயத்தை பார்ப்பபோம் . எமது சுதந்திர போராட்டத்தில் அது வழிகாட்டியாக அமையட்டும் . வெற்றி பெற்ற , பலமடைந்த அமெரிக்க நாட்டின் வராலறு உதாசீனம் செய்யப்படக் கூடியது அல்ல . அது எமக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் .

போர் தீவிரம் அடைந்த காலத்தில் கடல் வணிகத் துறையில் இருந்தவர் தான் இந்த பெனடிக்ட் ஆர்னோல்ட். கடல் வணிகனாக இருந்ததால் கடல்பயண திறமை இருந்தததால் பிரித்தானியாவுக்கு எதிரான அமெரிக்க சுதந்திர போரில் கடல்படையின் தளபதிகளில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டார் . ஏராளமான கடல் சண்டைகளிலும் , தந்திரமான நடவடிக்கைளிலும் வெற்றிகண்ட இவர் ஒரு சிறந்த சுதந்திர போராட்ட வீரனாகவே இருந்தார் .
இவர் மீது ஊழல் மற்றும் தீய நடத்தைகள் (corruption or other malfeasance ) தொடர்பான குற்றச் சாட்டுக்கள் எழுந்தன . அனைத்து விசாரணைகளிலும் இவர் தப்பித்துக்கொண்டார் . அவர் தேசிய சொத்தை தனதாக்கி கொண்டாலும் முன்னர் அவர் செய்த நற்காரியங்களுக்கான கொடுப்பனவாக அவை தேசிய காங்கிரசால் அனுமதிக்கப்பட்டன .

இதானால் விரக்தியும் , காழ்ப்புணர்வும் பெனடிக்ட் ஆர்னோல்ட் மனதில் உருவாகியது. தேசம் , தனது மக்கள் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்து விலகி காழ்புணர்வும் , விரக்தியும் அவரை ஆட்கொண்டன . இதனால் தான் எது சார்ந்து( அமெரிக்க விடுதலை ) இருந்தாரோ அதன் எதிரியுடன்( பிரித்தானிய அரசு ) இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டார் பெனடிக்ட் ஆர்னோல்ட் . இந்தவகையில் இவருடன் தொடர்பாடலில் இருந்த பிரித்தானிய உளவாளி Jhon Andre என்ற இராணுவ புலனாய்வாளர் அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியும் , அமெரிக்க சுதந்திர போரின் இராணுவ தளபதியாக இருந்த ஜோர்ஜ் வோசிங்டனினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைக் குழுவால் மரண தண்டனைக்குள்ளாகின்றார் . எனினும் துரோகி பெனடிக்ட் ஆர்னோல்ட் ஐ கைது செய்ய தளபதி ஜோர்ஜ் வோசிங்டனின் படைகள் முயன்றபோதும் துரோகி தப்பி ஓடி பிரித்தானியாவிடம் சரண் அடைந்து விடுகின்றார் . இதனைத் தொடர்ந்து பிரித்தானிய தரப்பில் பிரிகேடியர் ஜெனரலாக பதவி பெற்ற பெனடிக்ட் அர்னோல்ட் பின்னாளில் பெரிய வியாபாரியாக மாறினார் .
இதற்கெல்லாம் காரணமாக அமைந்த விடயங்களில் முக்கியமான விடயம் பெனடிக்ட் ஆர்னோல்ட் திருமணம் முடித்தPeggy Shippen மனின் குடும்ப பின்னணியாகும் . பிரித்தானிய அரசின் கீழ் உயர் பதவிகளில் இருந்த குடும்பத்தில் திருமணம் முடித்த பெனடிக்ட் ஆர்நோல்டுக்கு துரோக வேலைக்கான தொடர்புகள் இலகுவாகவே ஏற்பட்டன .

பெனடிக்ட் ஆர்னோல்ட் ஆரம்ப காலத்தில் சிறந்த சுதந்திர போராட்ட தளபதியாக இருந்தபோதும் , இறுதியில் பொது எதிரிக்கு துணை பொய் அமெரிக்க சுதந்திரப் போரை பலவீனப்படுத்த முனைந்ததால் அவர் துரோகி என அடையாளம் காணப்பட்டார் .
MORAL OF THE STORY

பெனடிக்ட் ஆர்னோல்ட் என்ற கடலோடியும் அவரது சகாக்களும் கடல் பரப்பில் விடுதலைப் போருக்கு சிறந்த பணியாற்றிய போதிலும் அவர்களது அரசியல் புரிதலின்மையும் , சொத்து சேர்த்தல் ஆசையும் அவரை ஒரு துரோகியாக்கியது . சகாக்கள் பலர் இனம் காணப்படாது மக்களோடு மக்களாக கலந்து அர்னோல்டை துரோகி என கதை விட்டனர் .
பலர் மாட்டிக் கொடனன்ர் . ஆர்னோல்ட் என்ற விருடச்சதின் நிழலில் வாழ்ந்த சுய திறமை அற்ற இவர்களால் அமெரிக்க விடுதலைப் போர் ரதத்தில் தவிடுபொடியாகினர் .



இந்தவகையில்Judas Iscariot இற்கு பின் துரோகிகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் சிலர் ,


Aaron Burr ( அமெரிக்க உப ஜனாதிபாயாக இருந்த காலத்தில் பிரித்தானிய படை எடுப்புக்கு உத முற்பட்டு தேசத்தை நலிவடைய செயல்பட்டார்)
Vidkun Quisling ( நோர்வேசியரான இவர் கிடலருடன் இணைந்துநோர்வே தேசத்தை நலிவடைய செயல்பட்டார் )
Aldrich Ames ( அமெரிக்கரான இவர் ரசியாவுடன்அமெரிக்க தேசத்தை நலிவடைய இணைந்து செயல்பட்டார் )
Julius and Ethel Rosenberg ( அமெரிக்கரான இவர்கள் ரசியாவுடன் இணைந்து அமெரிக்க தேசத்தை நலிவடையசெயல்பட்டனர் )
Iva Toguri D’Aquino -Tokyo Rose ( இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க படைகள் மன உளைச்சலை அடையும் பாடல்களை ஒலிபரப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான அமெரிக்க பெண்களில் ஒருவர் , இவர் ஜப்பானிய பூர்வீகம் உடையவர் )
Wang Jingwei ( சீனரான இவர் ஜப்பானுடன் இணைந்து சீன தேசத்தை நலிவடைய செயல்பட்டார் )
Brutus ( ஒரு சர்வாதிகாரியை கொலை செய்த பொது சரித்திரத்தில் துரோகத்தின் சின்னமாகவே உள்ளார் )
Jane Fonda ( அமெரிக்கரான இவர் அமெரிக்க தேசத்தை நலிவடைய வியட்நாமில் செயல்பட்டார் )
Robert Hanssen (அமெரிக்கரான இவர் அமெரிக்க தேசத்தை நலிவடைய ரசியாவுடன்இணைந்து செயல்பட்டார்)
John Walker, Jr. (அமெரிக்கரான இவர் அமெரிக்க தேசத்தை நலிவடைய ரசியாவுடன்இணைந்து செயல்பட்டார்)
Guy Fawkes ( பிரித்தானியரான இவரது தேசதுரோகதுக்கு விதிக்கப்பட்ட தண்டனை , நீரில் மூழ்கடித்து , துண்டமாக வெட்டி தொங்க விடப்படவேண்டும் என்பதாகும் . அவர் சாதுரியமாக தற்கொலை செய்து கொண்டதால் தண்டனை நிறைவேற்றப் படவில்லை )
Adam Yahiye Gadahn ( அமெரிக்கரான இவர் ரஇஸ்லாமிய தீவிர வாதிகளுடன் இணைந்து அமெரிக்க தேசத்தை நலிவடைய இணைந்து செயல்பட்டார்)
இவர்கள் எல்லோருமே
" ஒருவர் விசுவாசமாக இருக்க வேண்டிய தேசத்தின் ஆட்சியை கவிழ்க்க அந்த தேசத்துக்கு எதிராக போர் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது எதிரிக்கு ஆதாரமாக செயல் படுதல் தேச துரோகம் ஆகும் " என்ற விதிக்கமைய துரோகிகளாக தண்டிக்கப்பட்டவர்களாகும்.

எனவே சர்வதேச வரலாறு பின்னணி மற்றும் தற்போதைய சர்வதேச நியமங்களின்படி தமிழீழ தேசத்தையும் , அந்த மக்களையும் நலிவடைய செய்ய முயலும் எந்த சக்தியுடன் எவர் இணைந்து செயல்பட்டிருந்தாலும் , செயல்பட்டாலும் அவர்கள் துரோகிகளாகவே விடுதலை பெற்ற தமிழீழ தேச வரலாறு எழுதும் .

தமிழீழம் தான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது தமிழ் மக்களின் தெரிவல்ல சிறீலங்கா அரசின் மகாவம்ச சிந்தனை வலியுறுத்தும் முடிவு அது .

Geen opmerkingen:

Een reactie posten