தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 november 2012

உயிர்த்து வா மலாலா !


உயிர்த்து வா மலாலா !
*******************
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி அதில் வென்றும் காட்டிய சிறுமி தான் மலாலா.தாலிபான் சுவாத் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்திருந்த பொழுது பெண் பள்ளிகளை மூடினர்.கல்வியின்றி தாங்கள் அடையும் பெரும் துயரத்தை தன் டைரி மூலம் பிபிசி-உருது மொழி சேவையில் வெளிக்கொண்டு வந்தார் மலாலா.பின் தாலிபான்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு பெண்களுக்கு கல்வி கிடைத்தது.மலாலாவின் திறத்தை உலகமே
 போற்றியது.அப்போது மலாலாவுக்கு வயது 11.இப்போது அவளின் 14 வயதில் தாலிபான்கள் சுட்டுள்ளனர்.இப்பொழுது அவள் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருகிறாள்.'என் நாடு கல்வியில் சிறந்த நாடாக வேண்டும் என்பதுவே அவளின் கனவு.இப்பொழுது பாகிஸ்தானிய மக்கள் எல்லாம் 'நான் தான் மலாலா' என்று மலாலாவை தங்கள் வீட்டு பெண்ணாக
போற்றுகின்றனர்.உலகெங்கும் அவர் உயிர் பிழைக்க வேண்டுதல்கள் நடக்கின்றன.மலாலாவை பெண் கல்வியின் சின்னமாகவே உலகம் பார்க்கிறது.

Geen opmerkingen:

Een reactie posten