உலகின் பல நாடுகளில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் தொடர்பான செய்திகளின் தொகுப்புக்கள் !
யாழ் பல்கலைக்கழகத்தில் வன்முறை - மாணவர்கள் மீது இராணுவம் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !!
யாழ் பல்கலைக்கழகத்தில் வன்முறை - மாணவர்கள் மீது இராணுவம் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !!
நெதர்லாந்தில் அம்ஸ்ரடாம் என்னுமிடத்தில் நேற்று தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
பொதுஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள், தேசியக் கொடியேற்றலின் பின் மாவீரர் திருவுருவப்படத்துக்கு ஈகைச்சு டரேற்றல், அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்பமாகின.
தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சி கானங்கள் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து மாவீரர் உரை வாசிக்கப்பட்டு, பின் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை என்பன இடம்பெற்றன.
இவ்வாண்டு இடம்பெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டது. பல நூற்றுக்கணக்கான மக்கள் திரளாக வந்து இவ்வணக்க நிகழ்விலே பங்கேற்றமை எந்த நிலையிலும் எம்மண்ணிற்கும் அதன் விடிவிற்கும் தோளோடு தோள் நிற்போம் என்று உறுதியாகக் கூறுவது போல் இருந்தது.
மண்ணின் விடிவிற்காய் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி மண்டபம் நிறைந்த தமிழ் உணர்வாளர்கள் இம்மாவீரர் நிகழ்விலே கலந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி மன நிறைவுடன் அமைதியாக நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten