இங்கு தலைமைப்பேச்சு பேசிய பிரான்ஸிலிருந்து வந்த பெரியவர் ,
புலிகளின் தலைவர் பிரபாகரன் யாருக்குமே பணியாமல் போராடி தமிழ் ஈழம் பெறவே இறுதிவரை விரும்பினார் என்றும் இறுதியில் போராட்டம் தொடர்வது கருதி நீர் மூழ்கிமூலம் தப்பிச்சென்று சுகமே உள்ளார் என்றும் உறுதிபட கூறி கரகோஷம் பெற்றுக்கொண்டார்,அங்கு கூடியிருந்த தமிழர்களும் அவர் கருத்தை ஆமோதித்தவண்ணமே இருந்தனர்,அனைவரும் அமெரிக்காவிடம் நமது நிலையைக்கூறி உதவுமாறு கடிதமெழுதவும் கூற அவர் தயங்கவே இல்லை,அமெரிக்காவே அன்று உலகை கிட்லர் என்ற சர்வாதிகாரியிடமிருந்தும் ஜப்பானிடம் இருந்தும் விடுதலை பெற்று தந்ததாக பலப்பல உதாரணங்கள் மூலம் விளக்கிய(வெள்ளையரும் ஒல்லாந்தர்,போர்த்துக்கேயர்,பிரான்ஸினரெல்லாம் அன்பாலா நாடுகளை கைப்பற்றினர்!?கொடூரக்கொலைகளை அவர்கள் புரிந்த வரலாறுகள் இல்லையோ!அவர்களை கிட்லர் கொன்றால்,அடக்கினால் அவன் சர்வாதிகாரியா?என்ன நியாயமோ!!,நாங்கள் விலங்குகள் ஐரோப்பியர் தேவரோ!?) அவர் இன்றைய கிறிஸ்தவசபைகளை ,விநியோக துண்டுகளில் குறிப்பிடுவது போன்று அமெரிக்காவே உலகை வன்முறை,பயங்கரவாதங்களில் இருந்தும் காப்பாற்றும் என்று கூறி ஒரு கல்லில் இரு மாங்காய்களை தட்டிக்கொண்டார்!! இப்போது தமிழருக்கு உள்ள ஒரே வழி கிறிஸ்தவத்தை தழுவி அமரிக்காவிடம் கையேந்துவதே என்பதே அவர் உரையின் சாரம்!!
உண்மையில் போராட்டம் தரப்படுத்தல்,சிங்கள மொழி மட்டுமே அரசகரும மொழி போன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக ஆரம்பித்தபோது ஏகாதிபத்திய வல்லரசுகளை முக்கியமாக அமரிக்காவை சாடியே போராளிகள் மக்கள் ஆதரவை பெற்றனர்.அதற்கு புலிகளும் விதிவிலக்கல்ல!!அனால் அன்றே அன்ரன்,சந்திரஹாசன் போன்றோர் அமெரிக்க உளவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டனர்!இப்போது புலிகளும் அமரிக்காவின் சார்பாளர்களே என்று அறியப்படுகின்றது!!சமத்துவ பொருளாதாரக்கொள்கைகளான கம்யூனிஷம்,சோசலிஷம் பற்றியே பரப்புரை செய்து மக்களை போராட்டத்தில் ஆர்வமாக்கினர்!!அரச அடக்குமுறைகளை எதிர்த்தவர் தாம் அடக்குமுறையாளராக மாறினார்,இப்போது பகிரங்கமாக அமரிக்காவிடம் சரணடைந்தாலே வாழ்வு என்கின்றனர்.இவை பிரபாகரனின் கருத்தா அல்லது அமரிக்காவில் வாழும் நாடு கடந்த அரசாங்கத்தின் நன்றிகளா!!
Geen opmerkingen:
Een reactie posten