தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 november 2012

சர்வதேச ஆவணப் பட விழாவில் அரங்கேறிய புலிப் படுகொலை!!


சர்வதேச ஆவணப் பட விழாவில் அரங்கேறிய புலிப் படுகொலை!!

மனித உரிமைவாதியும், முறிந்த பனை என்கிற நூலின் ஆசிரியருமான ரஜினி திரணகம தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டமை குறித்து கனடாவின் தேசிய திரைப்பட சபையால் ஆங்கில ஆவணப் படம் எடுக்கப்பட்டு உள்ளது.
இதன் தமிழ் பெயர் அழ வேண்டாம் சகோதரி என்பது.
ரோரன்ரோவில் ஹொட் டொக் ஆவண விழாவில் கடந்த நாட்களில் இது திரையிடப்பட்டு உள்ளது.
இப்படத்தை இயக்குனர் ஹெலீன் க்ளோடாவ்ஸ்கி இயக்கி உள்ளார்.
 க்யூபெக்கின் ‘பெண் கொரில்லாக்கள்’ என்கிற வானொலித் தொடரை அடுத்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
இதன் உருவாக்கத்தில் ரஜினி திரணகமவின் சகோதரி நிர்மலா இராஜசிங்கம் பேராதரவு வழங்கி உள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் உள்ளுடலியல் பேராசிரியராக இருந்தவர் ரஜினி திரணகம. இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பல தரப்பினரதும் மனித உரிமை மீறல் செயல்பாடுகளை ஆவணப்படுத்தினார்.
ஆயினும் இந்த ஆவணம் நூல் வடிவம் பெறுகின்றமைக்கு முன்பாகவே முப்பத்தைந்தாவது வயதில் 1989 ஆம் ஆண்டு புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உள்ளது. 

http://thainaadu.com/read.php?nid=1353677180#.UK_sweSmCI4

Geen opmerkingen:

Een reactie posten