தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 november 2012

ஆஸ்லி சிமித்: கனடாவின் மத்திய அரச நிர்வாகத்தை புரட்டிப்போடப் போகின்ற ஒரு வழக்கு!!


கனடாவின் ஊடகங்களிலெல்லாம் 2007ம்; ஆண்டு சிறையில் இடம்பெற்ற ஒரு தற்கொலையே தற்போதைய செய்தியாகியுள்ளது. இந்தத் தற்கொலைத் தடுக்கப்பட்டிருக்கக் கூடியது என்ற வாதத்தை முன்வைத்து இடம்பெறும் குற்றச்சாட்டுக்கள் அரச நிர்வாக, பாதுகாப்புத்துறை சிறைச்சாலை நிர்வாகத்தை நோக்கிய எதிர்ப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.
1988ல் பிறந்த ஆஸ்லி சிமித் சாதாரண பிள்ளைகளைப் போல வளர்ந்து வந்தாலும் 2003ம் ஆண்டில் இவரது நடத்தைகளில் பல மாறுதல்களை கண்ட பெற்றோர் மாகாண சமூகசேவை நிறுவனங்களின் உதவியை நாடிய போது இவர் ஒருவகை உளத்தாக்க நோய்க்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே ஆண்டு ஒரு தபால் ஊழியரை அப்பிள் பழங்களை எறிந்து தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட ஆஸ்லி தொடர்ச்சியான வன்முறைப் போக்கால் இளையவர் நன்னடத்தைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அதன் பின்னரும் அவரது நோயின் காரணமாக வன்முறைப் போக்குத் தொடர்ந்தது.
அதன் காரணமாக 2005ல் சிறைச்சாலைக்கு 17 வயதில் மாற்றப்பட்ட ஆஸ்லி சிறைக்காவலர்கள் மற்றும் மருத்துவர்களால் கடுமையாகப் நடத்தப்பட்டார் என்பதும் பின்னர் 2007ம் ஆண்டு தீவிர மனநோய் மருத்துவச் சேவையுள்ள சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்தக் காலப்பகுதியில் ஆஸ்லி தனக்குத் தானே தீங்குவிளைவித்துக் கொள்ள பல தடவைகள் முனைந்திருந்தார். தற்கொலைக்கு ஒப்பான செயல்களிலிடும் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் 2007ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் தேதி ஆஸ்லி சிறைக்கூடத்திலேயே இறந்தார். விசாரணைகளின் போது ஆஸ்லி இவ்வாறு சாக முயன்றதைப் பார்த்துக் கொண்டு ஏதும் செய்யாமல் இருந்ததாக இரண்டு காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன்,
மேலும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஐவர் மீதும் குற்றஞ் சுமத்தப்பட்டது. 2008ம் ஆண்டு இந்த மரணம் தடுக்கப்பட்டிருக்கக்கூடியது என மரணவிசாரணை அதிகாரி அறிவித்திருந்ததோடு,
சிறைச்சாலை நிர்வாகத்தின் மீதான சில குறைகளையும் சுட்டிக்காட்டினார். இருந்த போதும் அரச தரப்புப் சட்டத்தரணி தனது வாதத்தின் மூலம் மேற்படி சிறை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவித்தார்.
2009ல் ஆஸ்லி சிமித்தின் குடும்பம் 11 மில்லியன் டொலர்கள் நஸ்ட ஈட்டைக் கோரி வழக்குத் தாக்கல் செய்யதோடு ஆஸ்லியின் மரணத்தின் போது உண்மைகள் மறைக்கப்பட்டதாகக் கோரி சிறைச்சாலை ஒளிப்பதிவுகளையும் கோரியிருந்தனர்.
இந்த நிலையில் ரொறன்ரோ ஸ்ரார் என்ற பத்திரிகை ஆஸ்லியின் நோய் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு பரிகாரம் காணாமல் அவர் எவ்வாறு மரணம் வரை இட்டுச் செல்லப்பட்டார் என்பதற்கான ஊடக விசாரணை பாணியிலான தகவல்களை வெளிக்கொணர்ந்தது.
இப்படியே தொடர்ந்த வழக்கு விசாரணையில் இப்போது சாட்சியப்படுத்தப்பட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை கனடாவில் ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஏழு மணி நேரத்திற்குள் ஐந்து தடவைகள் மனநோய் தணிப்பு ஊசி மருந்தேற்றியது, ஆஸ்லியை மிருகத்தனமாக கட்டுவது போன்ற பல கோபமூட்டும் செயல்கள் இந்த வீடீயோவில் வெளிவந்துள்ளன.
வீடியோவைப் பார்க்க இங்கே அழுத்தவும் 1280973–ashley-smith-a-revealing-and-disturbing-look-behind-bars
இந்த விசாரணை மீண்டும் உயிர்பெற்று ஆஸ்லி சாவதற்கு முயன்றதைப் பார்த்துக்கொண்டு நின்ற சிறைக் காவலர்களை மாத்திரமல்லாது, சிறைச்சாலை நிர்வாகக் கட்டமைப்பு மீதான ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே நம்பப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக 2007ம் ஆண்டில் ஆஸ்லி சிமித்திற்கு நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கனடியப் பிரதமர் கூட தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைகளைப் பற்றிய பேச்சே கனடாவை நிறைத்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten