தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 november 2012

இலங்கை அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்: பிரித்தானியா எச்சரிக்கை !


இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய்ந்த பிரித்தானியா, இலங்கை அரசு பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீதித்துறைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரித்தானிய பிரதிநிதி சுட்டிக்காட்டி, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனித உரிமை ஆர்வலர்கள், நீதித்துறைச் சார்ந்தோர், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் தண்டனை விதிக்கும் பொறிமுறைமை தொடர்பில் திருப்தி அடைய முடியாது எனவும், யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் கோரியுள்ளது.
கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என மேலும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.
http://news.lankasri.com/show-RUmqzBTZOdks4.html

Britain warns SriLanka
[ Monday, 05 November 2012, 09:22.21 AM GMT +05:30 ]
United Kingdom issued warning on present human rights situation in SriLanka.
UK representative for United Nation point out at present alleged attacks were carried out against journalist, individuals attached to the judiciary activities and human rights activist in SriLanka.
UK also stated such situations continue it would create major threats for Lankan government.
It also urges to take legal action against suspects violated the international law during the time of war in the country.
Britain finally urges to establish peaceful surrounding for people to share their opinions in the country.

http://eng.lankasri.com/view.php?24KAld0aapnYOd423AMe222cAmZ3edeZBAIc03eMAA2ed4O5nac03dOe42

Geen opmerkingen:

Een reactie posten