தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 november 2012

தமிழீழ மக்களுக்கு எல்லாளன் படை விடுக்கும் முக்கிய வேண்டுகோள்!


எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக சிறிலங்கா அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது அன்று.
அன்பான எமது உறவுகளே,
இலங்கை பேரினவாத அரசு எம்முடன் தனித்து நின்று யுத்தம் புரிந்து இருந்தால் நாம் முழு தமிழீழத்தையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் சம பல நிலையில் இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இலங்கை பேரினவாத அரசு பல உலக நாடுகளின் துணை கொண்டு எமது விடுதலைப் போரை இவ்வாறான இன்றைய சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது.
இருந்தும் எமது மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக சர்வதேச நாடுகளுக்காக எமது ஆயுதங்களை நாம் மௌனிப்பதாக அறிவித்து இருந்தோம். இதன் அர்த்தம் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்றோ எமக்கான விடுதலைப் போராட்டம் முடிக்கப்பட்டதென்றோ அர்த்தம் அல்ல.
அன்பான எம் உறவுகளே,
பல ஆயிரம் மாவீரர்களினதும், பல ஆயிரம் பொது மக்களினதும் தியாகத்தில் இருந்தும், புலம்பெயர் தமிழர்களின் கடும் உழைப்பில் இருந்தும் பெறப்பட்ட போர் ஆயுதங்கள் இலங்கை, தமிழீழப் பகுதி எங்கும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இருந்தும் இன்றைய சுழல் நிலையில் பல பகுதிகளில் புனரமைப்பு மீள் குடியேற்றம் என்ற போர்வையில் துப்புரவு பணிகள் நடந்து வருவதை நாம் அறிவோம்.
அத்துடன் எமது போர் தளபாடங்களை காட்டிக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என இலங்கை இராணுவம் கடந்த சில நாட்களாக அறிவித்தல்களை விடுத்து வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் எமது போர் ஆயுதங்கள், இயக்க உடைமைகள், ஆவணங்கள் காணப்படும் இடத்து அவற்றை இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தி காட்டிக் கொடுக்காமல் உரிய முறையில் பேணி பாதுகாத்து காலச் சுழலில் உங்களுக்கான தொடர்புகள் உருவாகின்ற போது உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
தமிழீழ எல்லாளன் படை

http://news.lankasri.com/show-RUmqzBRaNUmv3.html

Geen opmerkingen:

Een reactie posten