சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதாக, சாள்ஸ் பெற்றியின் உள்ளக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த அறிக்கையை கையளிப்பதற்காக நியுயோர்க் நேரடிப்படி இன்று காலை 9.30 மணியளவில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சாள்ஸ் பெற்றி சந்திக்கவுள்ளார்.
அதன் பின்னர், ஐ.நா பொதுச்செயலர் இந்த அறிக்கையை வெளியிடுவார் என்று நம்பப்படுவதாக அவரது பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதாக, சாள்ஸ் பெற்றியின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் ஐ.நா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://asrilanka.com/2012/11/14/10942
Geen opmerkingen:
Een reactie posten