ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடமபெற்ற பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடர் இன்று பிற்பகல் கூடிய போது இலங்கை தொடர்பாக இந்தியா ஸ்பெயின் , பெனின் ஆகிய நாடுகள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகள் சமர்ப்பித்த 210 பரிந்துரைகளில் 100 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும், 110 பரிந்துரைகள் ஏற்கப்பட்டிருப்பதாகவும் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மனித உரிமை பேரவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாங்கள் சமர்ப்பித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டமை குறித்து அமெரிக்காவும் பிரான்சும் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச நாடுகள் 210 பரிந்துரைகளை முன்வைத்த போதும் இந்தியா ஒரு பரிந்துரைகளை கூட முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த பரிந்துரைகளில் 3 பரிந்துரைகளை மட்டும் ஏற்றுள்ளதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை உள்நாட்டு சட்டங்களுக்கு அமைவாக விசாரணை நடத்துதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை படிப்படியாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்களை மட்டும் தாம் ஏற்றுக்கொள்வதாக சிறிலங்கா அறிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்த சிறிலங்காவின் பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த பரிந்துரைகளுக்கான சிறிலங்கா விசேட திட்டம் எதையும் மேற்கொள்ளப்போவதில்லை என்றும் எமது சட்ட திட்டங்களுக்கு அமைய மனித உரிமைகளை பேண நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் கட்டுப்படுவோம் என அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
30ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநாட்டிய எம்மை பல நாடுகள் பாராட்டியுள்ளன. சில நாடுகள் எமது நாடு தொடர்பாக கவலை தெரிவித்திருக்கின்றன. சர்வதேச நாடுகள் செய்யும் பரிந்துரைகள் அனைத்தையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டு சூழ்நிலைக்கு ஏற்பவே சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாடுகள் முன்வைத்த பரிந்துரைகளை காலம் கடத்துவதற்கே தமக்கு காலஅவகாசம் கேட்கிறது என சிறிலங்கா அளித்த பதில் தொடர்பாக ஐ.நாவில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten