இலங்கையில் பொறுப்புக்கூறும் விவகாரங்களில் இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போதல்கள், ஊடகவியலாளர்கள் பலவந்தமாக கடத்தப்படல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக பிரான்ஸ் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் கொலைகள், திருகோணமலையில் மாணவர்கள் கொலை, லசந்த விக்கிரமசிங்க கொலை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என அவர் குற்றஞ் சாட்டியுள்ளார்.

கடத்தல் தொடர்பான விடயங்களுக்கு தீர்கமான பதிலேதும் அளிக்கப்படவில்லை. அவ்வாறான குற்றவாளிகள் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நா மனிதஉரிமைகள் சபையில் அங்கம் வகிக்காவிட்டாலும், எமது உறுப்பு நாடுகள் பல்வேறு விவகாரங்கள் குறித்த கருத்துகளை முன்வைத்துள்ளன.
குறிப்பாக காணாமற்போதல்கள், பலவந்தமாக காணாமற்போதல்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எமது ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஏனைய உறுப்பினர்கள் பலவும் கவலை வெளியிட்டுள்ளதாக பேர்னாட் சவேஜ் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:
Een reactie posten