செட்டியார் தெருவுக்கு நகைக்கடை தொழிலுக்காகச் சென்ற இவர் கடந்த 30 ஆம் திகதி காணாமல் போனதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் நானுஓயா பங்களாவத்தை பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து செட்டியார் தெரு வர்த்தகர்களிடையே பதற்றம் நிலவுவதாகவும், பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த படுகொலையை கண்டிக்கும் வகையில், செட்டியார் தெரு நகைக்கடை வர்த்தகர்கள் இன்று நிர்வாக முடக்கத்தில் ஈடுபட்டதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கண்டன ஊர்வலம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten