தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 maart 2018

இலங்கையை கையாள விசேட நீதிமன்றம்! ஐ.நாவின் நிலைப்பாட்டுக்கு வரவேற்பு!


இலங்கையின் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, அனைத்துலகநிபுணர்களின் சிறப்பு நீதிமன்றத்தை ஆதரவுடன் நிறுவ வேண்டும் என்ற ஐ.நா மனிதஉரிமைச்சபை ஆணையாரின் நிலைப்பாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இலங்கை தொடர்பாக 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2017ஆம் ஆண்டு மீளஉறுதிப்படுத்தப்பட்ட 30/1 தீர்மானத்தை நடப்பாடுகள் தொடர்பில் ஐ,நா மனிதஉரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த விவாதத்தின் பொழுதே ஆணையாளரின் இந்நிலைப்பாடுதெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் உலகளாவிய அதிகாரத்தைப்பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளுக்கு தாம் அழைப்பு விடுக்கிறோம் எனவும்அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆணையாளரின் இந்நிலைப்பாட்டினை வரவேற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான வேட்கையில் புதியதொரு நம்பிக்கையை இதுஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையை அனைத்துலககுற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும், அல்லது அதற்கு சமனானஅனைத்துலக தீர்ப்பாயம் ஒன்றினை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையினை 2011ம் ஆண்டுமுதலே நாம் முன்வைத்து வருகின்றோம்.
2015ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டகையெழுத்துப் போராட்டத்தில் 1.8 மில்லியன் மக்கள் ஐ.நா நோக்கி கோரிக்கையாகஒப்பமிட்டிருந்தனர். இலங்கையை கண்காணிக்கவென நாம் நியமித்திருந்த பன்னாட்டு நிபுணர் குழுவும் (Sri Lanka -Monitoring and Accountability Panel (MAP) இதனைத்தான்வலியுறுத்தியிருந்தது.
தற்போது ஐ.நாவின் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னராக ஆணையாளர் அவர்கள்இலங்கை தொடர்பிலான இடைக்கால அறிக்கையினை வெளியிட்டிருந்தார்.
கடந்த 13ம் திகதி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக ஈழத்தமிழ் மக்களவைமற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டாக ஆணையாளர் அலுவலக அதிகாரிகளைச்சந்தித்து கலந்துரையாடி இருந்ததோடு, சபை விவாத்தில் வாய்மூல அறிக்கையில்அனைத்துலக நீதிமன்றம் தொடர்பிலும் பிரஸ்தாபித்திருந்தோம்.
இந்நிலையில், தற்போது இலங்கையைக் கையாள பன்னாட்டு நீதியாளர்களைக் கொண்டவிசேட நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற ஆணையாளரின் நிலைப்பாடுதொடர்பான வாய்மூல கருத்து நீதிக்கான வேட்கையில் புதிய நம்பிக்கையினைத்தந்துள்ளது.
குறிப்பாக 2014ம் ஆண்டும், வட கொரியாவை அனைத்துலக நீதிமன்றத்துக்குபாரப்படுத்துமாறு பாதுகாப்பு சபையினை நோக்கி ஐ.நா மனித உரிமைச்சபைகோரியிருந்தது.
தற்போது ரோஹிங்கியா விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல்¨நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று ஆணையாளர் குறிப்பிட்டுவருகின்றார்.
இவைகள் யாவும் முன்னுதாரங்களாக உள்ள நிலையில், இதனை நோக்கிய செயற்பாடுகளைதீவிரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

http://www.tamilwin.com/politics/01/177774?ref=imp-news

Geen opmerkingen:

Een reactie posten