சுவிட்சர்லாந்தில் வரவு செலவு திட்டங்களுக்கு மேலாக ஒரு புகலிடகோரிக்கையாளருக்கு 60 வீத செலவு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்தாண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள புகலிடம் மையங்களில் அரைவாசி மாத்திரமே நிறைந்து காணப்பட்ட போதிலும், வரவு செலவு திட்டங்களுக்கு மேலாக ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு 60 வீத செலவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு புகலிடம் கோருவோருக்காக வழங்கப்பட்ட 3,700 படுக்கைகளில் கிட்டத்தட்ட அரைவாசி காலியாக இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்தாண்டில் புகலிட மையங்களில் 20 பேர்களில் இருவர் என்ற கணக்கிலேயே புகலிடக் கோரிக்கையாளர்கள் காணப்பட்டுள்ளனர்.
அதிக காலியிட விகிதங்களுக்கமைய ஒரு நபருக்கான செலவினங்கள் பாரிய அளவு அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
உத்தியோகபூர்வ வரவு செலவு திட்டத்திற்கமைய ஒவ்வொரு நாளும் ஒரு புகலிட கோரிக்கையாளருக்கு 83 சுவிஸ் பிராங் செலவிடப்பட்டுள்ளது. அதில் உணவு, பாதுகாப்பு மற்றும் கவனிப்பு ஆகியவை உள்ளடங்கியுள்ளது. எனினும் 2017 ஆம் ஆண்டில் சராசரி செலவு 132 சுவிஸ் பிராங்குகளாகும்.
Bernese Oberland பகுதியில் உள்ள கிராமத்தில் ஒரு மையத்தில், 350 சுவிஸ் பிராங்குகள் செலவிடப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசாங்கத்தின் மோசமான வரவு செலவு திட்டம் காணரமாக 30 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் சேமிக்க முடியாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை கடந்த ஞாயிற்றுகிழமை வெளியாகிய செய்திகளுக்கமைய நிராகரிப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளருக்கு சுவிஸ் அரசாங்கம் நட்டஈடு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டத்தரணி ஊடாக குறித்த நபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் அவர் இலங்கையில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
வழக்கில் வென்ற சட்டத்தரணி தனது தரப்பினருக்காக பல்லாயிரகணக்கான சுவிஸ் பிராங்க் நட்ட ஈட்டினை பெற்றுக் கொடுத்துள்ளார்.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நபர் ஒருவர் சாதகமான தீர்ப்பு பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
சுவிட்சர்லாந்து சமீப ஆண்டுகளாக தமிழ் புகலிட கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து வருகிறது, எனினும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/swiss/01/176932?ref=rightsidebar
Geen opmerkingen:
Een reactie posten