தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 maart 2018

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் போராளிக்கு கடும் அச்சுறுத்தல்!


அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவருக்கு கடும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகமாக “தி கார்டியன்” வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த மாதம் 22ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான சாந்தரூபன் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், குற்றப் புலனாய்வு பிரிவினரால் நான்கு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட சாந்தரூபன் வீடு திரும்புவதற்கு பாதுகாப்பாக உணரவில்லை. இந்நிலையில், அவர், யாழ்ப்பாணத்தின் வடகிழக்கு கடற்கரை கிராமத்தில் வசித்து வருகின்றார்.
அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு பாதுகாப்பு படையினர் இரண்டு முறை சென்றுள்ளனர். முதலாவது விஜயத்தின் போது உள்நாட்டு யுத்தத்தின் போது 9 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவற்றை விசாரித்துள்ளனர்.
இரண்டாவது விஜயத்தின் போது சாந்தரூபனின் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
யாழ். பருத்தித்துறை கடற்படை முகாமில் இருந்து அதிகாரிகள் சாந்தரூபனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளை சாந்தரூபனிடம் கேட்டிருந்ததாக அவரின் மனித உரிமைகள் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதனால் சாந்தரூபனின் மனைவி அச்சப்படுகின்றார். அவர்கள் பாதுகாப்பான சூழலை உணரவில்லை.
எவ்வாறாயினும், இந்த அச்சுறுத்தல் ஒரு தெளிவான முயற்சி என தமிழ் அகதிகள் மன்றத்தின் செய்தி தொடர்பாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். அத்துடன், சாந்தரூபனுக்கு ஏற்பட்டுள்ள நிலை முற்றிலும் முன்கூட்டியே கணிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறியுள்ளார்.
பாதுகாப்பு படைகளின் பழிவாங்கும் நடவடிக்கை ஆழமாக இருக்கின்றது. குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கடும் அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் “பென் எமர்சன்,” விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மக்களுக்கு சித்திரவதைகள் தொடர்வது வழக்கமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அவுஸ்திரேலியா சென்றிருந்த சாந்தரூபன் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தமையின் காரணமாக யுத்தம் நிறைவுக்கு வந்திருந்த போதிலும் அரச படையினரின் விளைவுகளுக்கு சாந்தரூபன் அஞ்சியிருந்தார்.
எனினும், அவரது அகதி அந்தஸ்து கோரிக்கை அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. இது குறித்த வழக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தை ஈர்திருந்தது.
இதனையடுத்து, சாந்தரூபனை நாடுகடத்த வேண்டாம் என ஐ.நா சபை கோரிக்கை விடுத்திருந்த போதிலும், கடந்த 22ஆம் திகதி அவர் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/175793?ref=recommended3

Tamil asylum seeker deported by Australia 'harassed by Sri Lankan security forces'

Human rights advocates say Shantaruban subjected to ‘culture of reprisal’ and is too afraid to return home
Tamil Tiger flag
 The Tamil Tiger flag. The Sri Lankan government has consistently denied mistreatment of returning Tamils is occurring. Photograph: Oli Scarff/Getty Images
The Tamil asylum seeker forcibly deported from Australia last week is at liberty in Sri Lanka, but facing ongoing harassment and intimidation from security forces, human rights advocates have reported.
Shantaruban was handcuffed and forcibly removed from Australia last week, after five years during which he said he was not allowed to properly present his claim for asylum.
He was detained upon arrival at Bandaranaike airport in Colombo last Thursday and questioned by members of Sri Lanka’s criminal investigation department for more than four hours.
Since being released he has not felt safe to return home, but has been living in a coastal village north-east of Jaffna where he has family connections.
He has twice been visited by state security officers at the house where he is staying. On the first visit, officers checked through his phone and queried his activities during the Sri Lankan civil war which ended nine years ago.
On the second visit, the security officers took the details of Shantaruban’s wife and his children, including the school they attend.
KS Ratnavale, a human rights lawyer who is representing Shantaruban, said security officials had come from Point Pedro naval camp in Jaffna and repeatedly asked questions he had already faced in earlier interrogations.
“His wife is distraught. She is wondering whether it is safe to return home,” Ratnavale said.
Shantaruban, who goes by one name, arrived in Australia by boat in 2012. He is a former member of the Liberation Tigers of Tamil Eelam – the Tamil Tigers – the separatist group whose members have faced persistent post-war persecution in Sri Lanka.
“This is a clear attempt at intimidation and harassment,” said Aran Mylvaganam, a spokesman for the Tamil Refugee Council said, adding that Shantaruban’s situation was entirely predictable and highlighted a “callous indifference” by the Australian government.
“The culture of reprisal in the security forces runs deep. Returned Tamils, particularly those associated with the LTTE, face dangers that have been well-documented by the UN and human rights groups.”
The UN’s special rapporteur Ben Emmerson visited Sri Lanka last year and reported that torture “remains endemic and routine” for people suspected of association with the Tigers.
After Shantaruban’s arrival in Australia, he was released to live in the community, but was re-detained in 2015.
He fled Sri Lanka fearing repercussions from government security forces for his involvement with the LTTE, a separatist army that fought a brutal, and ultimately unsuccessful, 26-year war for independence until 2009, when it was defeated.
His claim for refugee status was rejected by the Australian government.
But he says he was unable to properly present his claim for protection because he was initially fearful to declare his association with the LTTE, fearing reprisal.
Shantaruban’s case drew particular attention from the United Nations.
In October last year the UN committee against torture issued an interim measure request to Australia, asking it to “refrain from returning [Shantaruban] to... Sri Lanka while his complaint is under consideration”. It later withdrew its request after submissions from the Australian government.
The Australian government maintains it does not remove from the country people requiring protection and does not return any person to danger.
The Sri Lankan government has consistently denied mistreatment of returning Tamils is occurring.


Australia issues deportation order for Tamil asylum seeker despite torture fears


https://www.theguardian.com/australia-news/2018/feb/13/australia-issues-deportation-order-for-tamil-asylum-seeker-despite-torture-fears

Geen opmerkingen:

Een reactie posten