ஜேர்மனி கிறித்துவத்தை அடிப்படையாக கொண்ட நாடு, இஸ்லாமுக்கு சொந்தமானது அல்ல என நாட்டின் புதிய உள்துறை அமைச்சர் பேசியுள்ளார்.
ஜேர்மனியில் தற்போது அமைந்துள்ள புதிய அரசின் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளவர் ஹோர்ஸ்ட் சீஹொஃபர்.
அகதிகள் தொடர்பான மெர்க்கலின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்த இவருக்கு புதிய அமைச்சரவையில் முக்கிய பொருப்பு வழங்கப்பட்டது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர், “கிறித்துவத்தை அடிப்படையாக கொண்ட நாடு ஜேர்மனி, இந்த நாட்டிற்கு இஸ்லாம் சொந்தமானது அல்ல.
ஜேர்மனியில் நம்முடன் வாழும் முஸ்லிம்கள் நம் நாட்டை சேர்ந்தவர்கள்தான், ஆனால் அதற்காக நம் மரபுகளை விட்டுக் கொடுக்க முடியாது.
முஸ்லிம்கள் நம்முடன் வாழ வேண்டும், ஆனால் நம் அருகிலோ நமக்கு எதிராகவோ இருக்க முடியாது” என்று பேசியுள்ளார்.
நாட்டின் அமைச்சராக இருக்கக்கூடியவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
http://news.lankasri.com/germany/03/174135?ref=ls_d_germany
Geen opmerkingen:
Een reactie posten