தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 maart 2018

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் போராளி! பீரிஸ் வெளியிட்ட தகவல்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் நாடு கடத்தியிருந்தது.
இவரிடம் எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை என மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் கடந்த வாரம் இடம்பெற்ற மாபெரும் போராட்டத்தில் பொது மக்கள் இராணுவத்தை வெளியேறுமாறு கோஷமிட்டனர்.


அரச அதிகாரிகளின் வாகனங்களை மறித்து வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவர்கள் மீது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் தம்புத்தேகமவில் கடந்த 28 ஆம் திகதி இராஜாங்கனை நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை பயன்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டு இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அப்பாவி பொது மக்கள் 51 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள் என பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியிருந்தது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் யுத்தத்திற்கு தேவையான படகுகளை உருவாக்கியதற்கு ஆதாரமிருப்பதாக கூறி அவரை அவுஸ்திரேலியா நாடு கடத்தியிருந்தது.
அவ்வாறு நாடு கடத்தப்பட்டவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணைகளை நடத்திவிட்டு இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துவிட்டது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இலங்கை மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதற்கு எந்த நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மிரெட் அல் ஹுஸைன் முகமாலை சென்று கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை பார்வையிட உள்ளார்.
ஆனால் இந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணி புதிய விடயம் அல்ல. இந்த நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்ஸவின் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது.
அப்போதைய காலக்கட்டத்தில் நோர்வே அரசாங்கம் இந்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு 7 வருடங்கள் தேவை என குறிப்பிட்டது.
ஆனால் அவ்வளவு காலம் எம்மால் காத்திருக்க முடியாது என தீர்மானித்த மஹிந்த ராஜபக்ஸ இலங்கை படையினரைக் கொண்டே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இலங்கை படையினர் ஒரு வருடத்திற்கு முன்பாகவே இந்த அனைத்து கண்ணிவெடிகளையும் அகற்றிவிட்டனர் எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/politics/01/176101?ref=ls_d_tamilwin

Geen opmerkingen:

Een reactie posten