இலங்கையில் கண்டியில் நடந்து வரும் தொடர் கலவரத்தால் நேற்று உயிர் பலி அதிகரித்திருக்கலாம் என பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எனினும் இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற புத்த மதத்தினருக்கும், முஸ்லிம் மதத்தினருக்கும் ஏற்பட்ட பிளவே இப்பிரச்சணைக்கு காரணமாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.
கடந்த 27ம் திகதி இஸ்லாமியர்கள் கட்டாய மதம்மாற்றம் செய்வதாக அவர்களின் வழிபாட்டு தளங்கள் மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதில் சிங்களவர் ஒருவர் மரணமடைந்தார்.
.இதனால் பெருத்த கோபமடைந்த சிங்களவர்கள் இஸ்லாமியர்களை தாக்குவதும், இஸ்லாமியர்கள் சிங்களர்களை தாக்குவதும் மாறி மாறி நடந்து வருகின்றது. இந்த கலவரம் கட்டுக்கடங்காத மிகப்பெரிய பூதாகரமாக மாறி குண்டுகளை வீசுவது என தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலவரத்தை கைவிட்டு விட்டு இயழ்பு நிலைக்கு மக்கள் திரும்ப வேண்டும் என இப்பிரச்சணைக்கு அரசு சுமூகமான தீர்வு எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை வைத்துள்ளது.
http://www.manithan.com/srilanka/04/164297?ref=ls_d_manithan
Geen opmerkingen:
Een reactie posten