புகலிடம் கோரி வரும் அகதிகளுக்கு ஆதரவளிக்கும் குணம் கொண்டவரான ஜேர்மனியின் Altena நகரத்தின் மேயரான Andreas Hollstein என்பவரைக் கத்தியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
Hollstein ஜேர்மனியில் அகதிகளுக்கு புகலிடம் தருவதை சிலர் விரும்பாததாலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்கிய நபரின்மீது பொலிசார் கொலை முயற்சி குற்றம் சாட்டி சிறையில் அடைத்துள்ளனர்.
தாக்கிய நபரின் பெயர் Werner S (56) என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைக் குறித்த வேறெந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
சான்சிலர் Angela Merkelஇன் கட்சியைச் சேர்ந்த Andreas Hollstein, 2015, 2016 ஆம் ஆண்டில் அகதிகள் பிரச்சினையின்போது Altena நகரில் தான் உறுதியளித்ததை விட அதிக அகதிகளை ஏற்றுக்கொண்டதற்காக நன்கறியப்பட்டவர்.
தாக்குதலுக்குப்பின் அரசு அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்க முன்வந்த நிலையில், எல்லா அரசியல்வாதிகளும் பொலிஸ் பாதுகாவலுடன்தான் பணி புரிய வேண்டும் என்றால் நாடாளுமன்றமே தேவையில்லை என்று கூறி பொலிஸ் பாதுகாப்பை மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/germany/03/174559?ref=ls_d_germany
Geen opmerkingen:
Een reactie posten