இலங்கையின் கண்டியில் நடந்தேறும் வன்முறைகள் மற்றும் அவசரகாலச் சட்ட அறிவிப்பு தொடர்பில் உலகின் பல்வேறு நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்காவின் எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் எனவும், அமெரிக்கா தங்கள் நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரித்தானியாவின் எச்சரிக்கை
இலங்கை விவகராம் தொடர்பில் பிரித்தானியா வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,இலங்கையின் கண்டி மற்றும் அம்பாரா பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத சம்பவங்களால், அந்த நாடு அவசரகாலச் சட்டம் மற்றும் குறிப்பிட்டப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது.
இதனால் இலங்கை அறிவித்துள்ள குறிப்பிட்ட பகுதிகளை பிரித்தானிய மக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவைகளை பிரித்தானிய பிரஜைகள் பார்வையிடுவதை கைவிட வேண்டும் எனவும், உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அந்த செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் எச்சரிக்கை
இதனிடையே அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சகமும் தங்கள் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கை அரசு அறிவித்துள்ள அடுத்த பத்து நாட்களுக்கும் அவுஸ்திரேலிய மக்கள் கவனமுடன் இருக்கவும், இலங்கை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள பகுதிகளை தவிர்க்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten