ஜேர்மனியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதற்காகவும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததற்காகவும் 20 வயதுடைய சிரிய அகதியை ஜேர்மன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஜேர்மானியர்களுக்கிடையே, ஒரு அச்சமும் நாளை என்னவாகுமோ என்னும் நிலையற்ற தன்மையும் கொண்ட சூழலை உருவாக்குவது அவசியம் என்னும் எண்ணத்தில் குறைந்தபட்சம் 200 பேரையாவது கொல்ல திட்டமிட்டதாக அந்த அகதி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட Yamen A என்னும் அந்த சிரிய அகதி, இணையத்தைப் பார்த்து வேதிப்பொருட்களை வைத்து வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
பொலிசார் அவனை 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த ஒரு சம்பவம் என்று இல்லாமல் சமீப காலமாக பிரித்தானியா, பிரான்ஸ், சுவீடன் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் தாக்குதல்களுக்குள்ளாகி வருகின்றன.
மொத்த ஐரோப்பிய யூனியனும் தீவிர வாதக் குழுக்கள் மற்றும் தனி நபர்களால் இஸ்லாமியவாத தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது.
Europol வெளியிட்ட 2017 ஆம் ஆண்டுக்கான “Terrorism Situation and Trend Report” என்னும் அறிக்கையில் ”Brussels, Nice மற்றும் Berlinஇல் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் பலரை கொன்று காயப்படுத்தி, இஸ்லாமியவாத தீவிரவாதிகள் ஐரோப்பிய யூனியனின் மக்கள்மீது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்த விரும்புகிறார்கள், அவர்களால் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை செய்து காட்டியிருக்கின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/germany/03/174093?ref=ls_d_germany
Geen opmerkingen:
Een reactie posten