பிரித்தானியாவின் நாட்டிங்ஹாமில் பிரித்தானிய இளம்பெண்களால் தாக்கப்பட்ட Mariam Moustafa(18) என்னும் எகிப்திய இளம்பெண் உயிரிழந்ததையடுத்து பிரச்சனை வலுத்துள்ளது.
மூன்று வாரங்களுக்குமுன் நாட்டிங்ஹாமில் பேருந்துக்காக காத்திருந்த Mariam என்னும் எகிப்திய இளம்பெண் ஒரு கூட்டம் பிரித்தானிய இளம்பெண்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
அவர் தப்பிச் செல்ல முயன்றபோதும் அவரைப் பின் தொடந்த அந்தப் பெண்கள் பேருந்தில் ஏறி அவரைக் கடுமையாகத் தாக்கினர், இதனால் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது, பேருந்தின் ஓட்டுநர் Mariamஐ காப்பாற்ற முயன்றார்.
கடைசியில் மயங்கிச் சரிந்த Mariam மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு சில சிகிச்சைகளை அளித்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டது.
வீட்டுக்குச் சென்ற Mariam மீண்டும் மயங்கிச் சரிந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சுமார் 12 நாட்கள் கோமாவிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது இந்த விடயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது, Mariamஇன் பெற்றோர் இது ஒரு இனவெறித் தாக்குதல் என்று புகார் கூறியுள்ளனர்.
எகிப்து மக்களிடையே இந்த சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, எகிப்திய அரசாங்கமும் பிரித்தானியாவிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
எகிப்து இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சில நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரித்தானியாவுக்கு அனுப்ப உள்ளது.
குற்றவாளிகளை விரைந்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்று எகிப்திய தூதரகம் கோரிக்கை வைத்துள்ளது. எகிப்து முழுவதும் "Mariam's rights will not be lost" என்னும் hashtag trending ஆகி வருகிறது.
இந்நிலையில் Mariam Moustafaவின் பெற்றோர் பிரித்தானிய அரசாங்கம் மீதும், மருத்துவமனை மீதும் பொலிசார் மீதும் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பிரித்தானிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சரியான சிகிச்சை அளிக்காமல் தங்கள் மகளை மருத்துவமனை வீட்டுக்கு அனுப்பி விட்டது என்றும் ஏற்கனவே ஒரு முறை தங்கள் மகள் தாக்கப்பட்டபோது கொடுக்கப்பட்ட புகாரை சரியாக விசாரித்து குற்றமிழைத்தவர்களைக் கைது செய்திருந்தால் அவர்கள் மீண்டும் தனது மகளைக் கொல்லும் அளவுக்கு சென்றிருக்க மாட்டார்கள் என்றும் இது ஒரு இனவெறித்தாக்குதல் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
பிரித்தானியாப் பொலிசாரோ இது இனவெறித்தாக்குதல் போல் தெரியவில்லை என்றும் தாங்கள் தொடர்ந்து திறந்த மனதுடன் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Mariam Moustafaவைத் தாக்கிய இதே கும்பல் முன்னொரு முறை அவரைத் தாக்கியது என்பதும் அவர் பொலிசில் புகாரளித்தபோது 17 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/uk/03/174138?ref=ls_d_uk
Geen opmerkingen:
Een reactie posten