ஆப்பிரிக்கா அகதிகள் இருவர் ஸ்பெயினுக்குள் காரில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட நிலையில் எல்லையில் பொலிஸ் சோதனையில் சிக்கியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான மொரோகோவிலிருந்து ஸ்பெயினுக்கு மெர்சிடீஸ் சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
ஸ்பெயின் நகரான மிலிலாவுக்கும், மொரோகோவுக்கும் இடையிலான எல்லை பகுதியில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குறித்த மெர்சிடீஸ் சொகுசு காரை நிறுத்திய பொலிசார் அதை சோதனை செய்தனர்.
அப்போது காரின் பின்பக்கத்தின் அடியில் உலோக தகடால் மூடப்பட்டிருந்தது.
இதையடுத்து சந்தேகமடைந்த பொலிசார் இதயதுடிப்பை கண்டுப்பிடிக்கும் கருவியை வைத்து அதன் உள்ளே இரண்டு பேர் மறைந்திருப்பதை கண்டுப்பிடித்தனர்.
இரண்டு பேரும் அகதிகள் என்பதும், உடல் நீரிழப்பால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது.
பின்னர் அகதிகள் வந்த காரின் ஓட்டுனர் மனித கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
இது போன்ற அகதிகள் வாகனங்களில் கடத்தப்பட்டு செல்வது மிலிலாவில் அதிகம் நடக்கிறது என அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
அதே போல அகதிகளை எல்லையை தாண்டி கூட்டி செல்ல மனித கடத்தல்காரர்கள் குழு ஒருவருக்கு £3,550 என்ற அளவில் பணம் வசூலிப்பார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
http://news.lankasri.com/othercountries/03/173896?ref=rightsidebar-manithan
Geen opmerkingen:
Een reactie posten