தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 maart 2018

இலங்கை அகதிகளை பிரித்தானியாவுக்குள் கடத்த முயன்ற நபருக்கு சிறை !


பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி காரணமாக Calais துறைமுகம் வழியாக பிரித்தானியாவுக்குள் அகதிகள் நுழைவது கடினமாகி விட்டபடியால் Caen துறைமுகம் வழியாக அகதிகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக பிரித்தானிய லொறி டிரைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜனவரி 14ம் திகதி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Issa Kebe என்னும் நபர் இரண்டு இலங்கை குடிமக்களை Portsmouth துறைமுகம் வழியாக பிரித்தானியாவுக்குள் கடத்திக் கொண்டு வரும்போது பிடிபட்டார்.
பாதுகாப்பு சோதனைக்காக Issa Kebe-ன் வாகனத்தை அதிகாரிகள் தடுத்தி நிறுத்தி சோதனையிட்ட போது, பின் பகுதியில் இரண்டு மனிதர்கள் அடைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது, உடனடியாக அவரை கைது செய்த அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தினர்.

Portsmouth Crown நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தான் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் ஒரு கடத்தல் கும்பலுக்காக இரண்டு இலங்கை நாட்டவரையும் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நபருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள்
பிரித்தானிய லொறி நிறுவனமான AMT European Transport ஐ நடத்தும் Alan Mouland, Caenஇற்கு வடக்கிலுள்ள Ouistreham துறைமுகத்திலிருந்து வர்த்தகக் காரணங்களுக்காக லொறியில் பயணிப்பது வழக்கம்.
Caenஇலிருந்து Portsmouthஇற்கு பயணிப்பதற்கு டிரைவர்கள் அஞ்சுவதாக அவர் தெரிவிக்கிறார். அங்கு ஏராளமான அகதிகள் இருப்பதாகவும், கொஞ்சம் அசந்தால் அவர்கள் உங்கள் வாகனங்களில் ஏறிக்கொள்வார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
ஒரு சந்தர்ப்பத்தில் 12 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக வாகனங்களில் ஏற முற்பட்டதைக் கண்டதை நினைவு கூறுகிறார்.
எப்படியும் பிரித்தானியாவுக்குள் அதிகரித்துவரும் மக்கள் கடத்தல் வாகனங்களில் சென்று வர்த்தகம் செய்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது என்பது மட்டும் உண்மை.




http://news.lankasri.com/france/03/173905?ref=rightsidebar-tamilwin

Geen opmerkingen:

Een reactie posten