கொழும்பு - ஆமர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எவ்வாறாயினும், சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – ஆமர் வீதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
கொழும்பு - ஆமர் வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், கார் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்தி - அஜித்
ஆமர் வீதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கொழும்பு ஆமர் வீதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்து.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கார் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த காரில் இருந்த ஆண் மற்றும் பெண் ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் 42 வயதான நபர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் இல்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தெமட்டகொடை வேலுவன வீதியை சேர்ந்த இனமுத்து அன்டனி ராஜ் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சந்தேக நபர்களை கைதுசெய்ய ஆமர் வீதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
http://www.tamilwin.com/community/01/177430?ref=imp-news
Geen opmerkingen:
Een reactie posten