தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 maart 2018

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!

இலங்கையினுள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.எனினும், அரசாங்கத்தின் தடையை மீறியும் இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற தொலைபேசி செயலிகளை சிலர் சட்டவிரோத முறையில் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறானவர்களை மிகவும் இலகுவாக கண்டுபிடிக்க முடியும் என டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி போலித் தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நாளைய தினத்திற்குள் நீக்கக் கொள்ள முடியும் எனவும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten