தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 april 2017

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை


இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட குற்றத்திற்காக, மனித உரிமை ஆர்வலர் லீனா ஹென்றிக்கு அபராதப் பணமாக 10,000 ரிங்கிட் செலுத்துமாறு கோலாலம்பூர் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் லீனா ஹென்றிக்கு அந்த தண்டனை போதுமானதாக இல்லை, மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் மேல்முறையீட்டைப் பதிவு செய்வதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்முறையீட்டு தீர்மானம் தொடர்பில் தனது கட்சிக்காரர் கடிதம் ஒன்றை பெற்றுள்ளதாக வழக்கறிஞர் நியூ சின் யிவ் (New Sin Yew) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
10,000 ரிங்கிட் அபராதத்திற்கு எதிராக வழக்கு மேன்முறையீடு செய்கின்றார்கள் எனவும், இந்த விடயத்தை அறிவிக்கும் கடிதம் ஒன்றை லீனா பெற்றுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட போர் தவிர்ப்பு வலயம், இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணப்படத்தை மலேசியாவில் திரையிடப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதற்கான அபராத தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது தண்டனைக்கு எதிரான அரசாங்க வழக்கறிஞர் ஒருவரினால் மேன்முறையீடு செய்யப்படுவதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவிலுள்ள சேலாங்கூரில் உள்ள சீன மண்டபம் ஒன்றில் 2013 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி குறித்த ஆவண படத்தை லீனா திரையிட்டிருந்தார்.
இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படங்களின் மூலம் இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/community/01/142092?ref=lankasri-home-dekstop

Geen opmerkingen:

Een reactie posten