ஊதியம்
பிரித்தானியா அரசின் சார்பில் வெளிவந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், 25 வயதுக்கு மேற்பட்ட பணியில் இருக்கும் நபர்களுக்கு குறைந்த ஊதியம் ஒரு மணிநேரத்திற்கு £7.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
18-20 வயது நபர்களுக்கு £5.60ம், 21-24 வயதுக்குள் இருக்கும் நபர்களுக்கு £7.05 என்ற அளவில் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020ல் இது £9ஆக உயரலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
சாலை வரி
அதே போல மாசு வெளிபடாத கார்களுக்கு மட்டுமே இனி சாலை வரியில் விலக்கு அளிக்கப்படும் எனவும், மாசு வெளிபடும் கார்களுக்கு வரி விலக்கு கிடையாது என அறிவிக்கபட்டுள்ளது.
ஓய்வூதியம்
வரும் 6ஆம் திகதி முதல் வாடிக்கையாளர்களுக்கு Employer-Funded Pensions Advice -ன்படி £500 வரி இல்லா சலுகைகள் கிடைக்கும்.
இதை Pensions Advice Allowance-வுடன் சேர்த்தால் மொத்தம் £ 1,000 கிடைக்கும்.
சட்டரீதியான மகப்பேறு, தத்தெடுப்பு மற்றும் பெற்றோர் ஊதியத்தின் வாராந்திர விகிதம் £ 140.98 அளவிற்கு அதிகரிக்கிறது.
Geen opmerkingen:
Een reactie posten