இலங்கை பொலிஸாரின் சீருடையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய எதிர்வரும் நாட்களில் கடும் நீல நிறத்திற்கு பொலிஸாரின் சீருடைகள் மாற்றமடையவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொலிஸ் மற்றும் சர்வதேச பொலிஸாரின் சீருடை நிறங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



Geen opmerkingen:
Een reactie posten