இலங்கையர்கள் உள்ளிட் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, துருக்கி இஸ்மிர் பகுதியில் வைத்து நேற்று காலை குறித்த படகு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பாய்மரப் படகு ஒன்று பயணிப்பதாக தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட துருக்கி கடலோர காவல் படையினர் அந்த படகினை வழிமறித்துள்ளனர். 8 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் குறித்த படகில் பயணித்துள்ளனர்.
பாகிஸ்தான், சிரியா, இலங்கையை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் இத்தாலி செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு கிரேக்கம் செல்ல முற்பட்ட மேலும் 43 பேரை துருக்கி லெஸ்போஸ் கடற்பரப்பில் வைத்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக துருக்கி அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/world/01/142752?ref=lankasri-home-dekstop
Geen opmerkingen:
Een reactie posten