தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 april 2017

பெண் போராளி திறமையாக எதிர்த்து தாக்கினார்: இலங்கை இராணுவம் -ராஜதந்திரமாம்!


பெண் போராளி திறமையாக எதிர்த்து தாக்கினார்: இலங்கை இராணுவம்
இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களும் கூட இது தொடர்பில் விமர்சனங்களுடன் கூடிய பேசு பொருளாக மாறி வருகின்றது.
இலங்கைப் படைவீரர்களின் நிலை குறித்தும், அவர்களின் யுத்த வெற்றி தொடர்பிலும் தற்போது அதிகமாக பேசப்படுகின்றது.
2006ஆம் ஆண்டு இடம் பெற்ற யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் தனது தாக்குதல் தொடர்பில் ஊடகம் ஒன்றிக்கு கருத்து வழங்கியிருந்தனர்.
அந்த காணொளி மீண்டும் அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்பட்டு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில்,
“விடுதலைப் புலிகளை விடவும் நாம் அதிக பலத்துடனும், வெறியுடனும் இருக்கின்றோம். அதனால் வெற்றி பெறுவது நிச்சயம், அவர்களை முன்னேற விடாமல் நாம் தாக்கிக் கொண்டு வருகின்றோம்.

ஒரு முறை நாம் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழியினைத் தாக்கினோம், அந்த பதுங்கு குழியினில் நான்கு புலிகள் இருந்தனர். ஒருவர் ஓட முற்பட்ட போது சுட்டோம்.
அடுத்து பதுங்கு குழியில் இருந்தவர்களைத் தாக்கினோம். அதில் ஒரு பெண் போராளி தனியாக எமக்கு சவாலாக தாக்கினார். திறமையாக செயற்பட்டு எதிர்த்து தாக்கினார் இறுதியில் அவரையும் கொன்றோம்”
காலநிலை பிரச்சினை வந்தது அதனையும் தாண்டி முன்னேறிச் சென்றோம். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை அவதானித்து அவர்களை நேருக்கு நேர் தாக்கி வருகின்றோம்”
இவ்வாறாக காணொளியில் இராணுவ விஷேட பிரிவு வீரர் கருத்து கூறியுள்ளார். மேலும் இராணுவத்தினரின் முன்னேற்றம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவலாக பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
இதனை அடிப்படையாகக் கொண்டு இராணுவ வீரர்கள் யுத்தகாலத்தில் செய்த சேவைகள், வெற்றிக்காக அவர்கள் செய்த பங்களிப்பு போன்றவை தொடர்பில் கூறப்படுகின்றன.
அத்தோடு புலிகளின் மீது அவர்கள் ஓர் தனிப்பட்ட மதிப்பு கொண்டு யுத்தம் செய்ததாகவும் சிலர் விமர்சனங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அப்படி பார்க்கும் போது இராணுவத்தினரின் குற்றங்களை மறைப்பதற்காகவும், அவர்கள் மீது நற்கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்காகவுமே இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.asrilanka.com/2017/03/27/42201#sthash.SxKJzwgA.dpuf

Geen opmerkingen:

Een reactie posten